.

Pages

Friday, August 26, 2016

ஹஜ் செய்திகள்: மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்களில் தொழுகைக்கு அனுமதியில்லை!

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 25
முஸ்லிம்களின் புனித இடமான மக்காவில் வழக்கமாக தவாஃப் செய்யும் பகுதியில் ஹஜ் காலம் முடியும்வரை தொழுகைக்கு அனுமதி இல்லை.

மக்கா  பிரதேச கவர்னர் இளவரசர் காலித் அல் பைஸல் அவர்களின் உத்தரவின்படி, ஹஜ் யாத்ரீகர்கள் சங்கடங்கள் இன்றி வசதியாக தவாப் செய்திடும் வகையில் (ஆகஸ்ட் 25) முதல் ஹஜ் காலம் முடியும் வரை, புனித மடஃப் (Mataf) எனும் தவாப் சுற்றும் பகுதியில் மட்டும் தொழுகைக்கான அனுமதி கிடையாது.

ஹஜ் யாத்ரீகர்களும் இன்ன பிறரும் பள்ளியின் உள் வளாகங்களிலும், மாடிகளிலும், சுற்றுப்புறங்களிலும் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதே உத்தரவு புனித ரமலான் காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- நம்ம ஊரான்

1 comment:

  1. தலைப்பில் 'தொழுகை'என்பதை 'தொகை'என்று போட்டு இருக்கிறீர்கள்.திருத்தவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.