தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பிரதான சாலைகளில் கடந்த 7 தினங்களாக தேங்கியுள்ள மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இச்சாலை முழுவதும் சேரும் சகதியாக இருப்பதால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வாகனங்கள் சாலையில் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆதலால் சம்பந்தபட்ட ஏரிப்புறக்கரை ஊராட்சி நிர்வாகம் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென இப்பகுதியினரின் கோரிக்கை தினமணி நாளிதழ் செய்தியில் இன்று திங்கட்கிழமை பிரசுரமாகியது.
இந்நிலையில், இப்பகுதி தன்னார்வல இளைஞர்கள் தானாக முன்வந்து பிலால்நகர் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இன்று திங்கட்கிழமை காலை தீவிரமாக ஈடுபட்டனர்.






இந்த இளைஞர்களுக்கும் இவர்களைப் போல் சமூகப்பணிகளில் ஈடுபடும் அனைத்து அதிரை இளைஞர்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக.
ReplyDelete