அதிரை நியூஸ்: நவ.04
ஒடிஷா மாநிலம் மல்கான்கிரி வனச்சரகம் அருகேயுள்ள கிராமம் முன்சா. இங்கு வாழும் பழங்குடியின மனிதர் 'தசராதி பதியாமி' பதறி எழுந்த சம்பவம் ஒன்று நடந்தேறியது.
கடந்த வியாழக்கிழமை அன்று காலை வழமைபோல் படுத்துறங்கி கண்விழித்த தசராதிக்கு பக்கத்தில் இரவோடு இரவாக படுக்கையறையுள் நுழைந்து சுகமான தூக்கம் போட்டுக் கொண்டிருந்த முதலையை கண்டவுடன் மனைவியை இழுத்துக் கொண்டு வெளியே பாய்ந்து தப்பித்தார். மேலும் பக்கத்து அறையில் உறங்கிய தனது இரு மகள்களையும் பரணியில் ஏறித்தப்புமாறு கத்தினார்.
சுமார் 12 அடி நீளமும் 500 கிலோ எடையும் உடைய அந்த முதலை அருகிலிருக்கும் 'சிட்டாகுடா' அணையிலிருந்து தப்பி வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கிராமத்தினரின் உதவியோடு வீட்டின் ஓட்டை உடைத்து தனது மகள்களை காப்பாற்றினார். மேலும் வனத்துறையின் உதவியோடு அந்த முதலை பிடிக்கப்பட்டு அங்கிருந்து 60 கி.மீக்கு அப்பால் ஆற்றில் கொண்டு விடப்பட்டது.
இது என்ன பிரமாதம்! ஒரு சில வீடுகளில் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கும் கணவனும் முதலையாக வந்து வாய்க்கிறார்கள் என்கிறீர்கள் தானே!
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.