.

Pages

Friday, July 10, 2020

தஞ்சை மாவட்டத்தில் 31 இடங்களில் கரோனோ பரிசோதனை: எந்தெந்த இடங்கள்? (முழு விவரம்)

அதிரை நியூஸ்: ஜூலை 10
தஞ்சாவூர் மாவட்டத்தில் 31 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 31 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அணைக்கரை சோதனைச் சாவடி, நீலத்தநல்லூர் சோதனைச் சாவடி, விளாங்குடி சோதனைச் சாவடி, பெரியார் மணியம்மை தனிமைப்படுத்தும் மையம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் மருத்துவமனை, கும்பகோணம் அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை, திருவையாறு அரசு மருத்துவமனை, பாபநாசம் அரசு மருத்துவமனை, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை, பேராவூரணி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மாநகராட்சி நடமாடும் பரிசோதனை மையம், கும்பகோணம் நகராட்சி நடமாடும் பரிசோதனை மையம், பட்டுக்கோட்டை நகராட்சி நடமாடும் பரிசோதனை மையம், வல்லம் நடமாடும் பரிசோதனை மையம், பட்டீஸ்வரம் நடமாடும் பரிசோதனை மையம், முருக்கங்குடி ஆரம்ப சுகாதார நிலையம், கோனுலம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையம், பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையம், நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையம், மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம், வல்லம் ஆரம்ப சுகாதார நிலையம், திருவோணம் ஆரம்ப சுகாதார நிலையம், தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், மதுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையம், செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம், அழகிநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், பாளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், தங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் கொரோனா பரிசோதனை மையத்தில் மாதிரியை கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடல்நலம் சரியில்லாதவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை தொடர்புகொண்டு நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.