.

Pages

Wednesday, December 25, 2013

2013 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வுகள் - ஒரு தொகுப்பு [ புகைப்படங்கள் ]

06-01-2013 : அதிரையில் கடந்த [ 06-01-2013 ] அன்று காலை அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டபந்தயத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.  சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறுவர்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள்,பெரியவர்கள் என பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். 

20-01-2013 : அதிரை கடற்கரை தெரு தர்ஹாவின் ஒரு பகுதியில் ஜொஹரா அம்மா என்ற பெயரில் திடீர் தர்ஹா ஏற்படுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

07-02-2013 : AAMF'ன் நிர்வாகிகள் கும்பகோணம் சென்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து நமதூர் பொது நலன் தொடர்பான அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் 24 மணி நேர சேவை வசதி செய்து தருவது, அதிராம்பட்டினத்திலிருந்து – மன்னார்குடிக்கும், மன்னார்குடி வழியாக கும்பகோணம் – திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு அரசு பேருந்துகள் வசதி செய்து தரக்கோருதல், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலையைப் புதுபித்தல் ஆகிய முக்கிய பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்துக்கூறி உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.

04-03-2013 : இன்று [ 04-03-2013 ] காலை 9.45 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர்கள் லேப்டாப் வழங்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 01-04-2013 : கடந்த [ 01-04-2013 ] அன்று நடுத்தெரு தக்வாப் பள்ளியின் நிர்வாக பொறுப்புக்கு புதிய நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட வக்ஃப் அலுவலர்களின் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து கடந்த [ 04-04-2013 ] அன்று இரவு தக்வா பள்ளியில் மவ்லூத் நிகழ்ச்சி நடைபெற்றது. 

28-04-2013 : வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பினர் [ ATCO ] அதிரையில் நடத்தும் மாபெரும் பொருட்காட்சியின் அரங்கு கடந்த [28-04-2013 ] அன்று பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது. முதல்நாளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்களை அரங்கிற்குள் இலவசமாக அனுமதித்தனர் இந்த பொருட்காட்சியில் பல்வேறு நிறுவனத்தினரின் ஸ்டால்கள் இடம்பெற்று இருந்தன.

17-04-2013 : அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிலம் தொடர்பாக பள்ளியை நிர்வகித்து வரும் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கும், அதிரை பேரூராட்சி நிர்வாகித்தினருக்கும் வாதி பிரதிவாதியாக வழக்குகள் போடப்பட்டு நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தன.

இவற்றில் மற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் முக்கியமாக கருதப்படுகிற ‘இந்த இடம் யாருக்கு சொந்தம் ? ‘ என்ற வழக்கில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் இந்த இடம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கு சொந்தம் என்றும், அதில் பள்ளிவாசல் கட்டுவதற்குரிய முயற்சியில் சங்கத்தினர் ஈடுபடலாம் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

21-04-2013 : நக்கீரன் என்ற புலனாய்வு வார இதழின் 'சொன்னா நம்பமாட்டீங்க !' என்ற பகுதியில் அதிரை பேரூராட்சியின் ஊழல் குறித்த செய்தி இந்த வார [ 2013 ஏப்ரல் 20-23 ] என்ற தேதியிட்ட இதழில் வெளிவந்துள்ளது. இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்தன. இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
21-05-2013 : பிலால் நகர் அருகே திறக்கப்படாமல் உள்ள இரயில்வே கேட்டினால் பல விபத்துக்கள் நடக்கின்றன என்பதையும், இதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து டி.ஆர்.பாலுவின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

[ 21-05-2013 ] பகல் 1 மணியளவில் திருவாரூரிலிருந்து வருகை தந்த இரயில்வே கோட்ட பொறியாளர் அருள் மொழி அவர்கள் ஆய்வை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், JCP இயந்திரத்தைக் கொண்டு சாலையில் அமைந்துள்ள வேகத்தடைகள், அபாயகரமான வளைவை எச்சரிக்கும் அறிவிப்பு பலகைகள், முட்புதர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்திவிட்டு மூடிய கேட்டுகளை வாகன போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.

01-06-2013 : அதிரை அரசு பொதுமருத்துவமனையின் கூடுதல் மருத்துவருடன் கூடிய 24 மணி நேர சேவை, அதிரையிலிருந்து மன்னார்குடிக்கு புதிதாக அரசு போக்குவரத்து துவக்குதல், அதிரை பேரூந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலையை மறு சீரமைத்து தருதல் உள்ளிட்ட அதிரை நகர பொதுமக்களின் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை நியூஸ் வலைத்தள நிர்வாகிகள் நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களை சந்தித்து நேர்காணலை நடத்தினர்.

17-06-2013 : தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து அதில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டி எழுப்புவதற்காக ரூபாய் 85 இலட்சம் பொருட்ச்செலவில் 120 கடைகளைக் கொண்ட வளாகம் கட்டுவதற்காக கடந்த [ 17-06-2013 ] அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

29-07-2013 : பட்டுகோட்டை அதிராம்பட்டினம் சாலை காளிகோயில் அருகில் இன்று பகல் சுமார் 2.00 மணியளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது SRM பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  பஸ் கவிழ்ந்து பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்து சென்றுள்ளனர். இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

01-08-2013 : நாகப்பட்டினத்திலிருந்து ஈசிஆர் சாலை வழியாக அதிரையை கடந்து செல்லும் போது எதிரே வந்த நாய் குறுக்கே புகுந்ததால் திடிரென்று பிரேக் போடும் போது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஆறு மாதமே ஆன பெண் குழந்தை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வாகனத்தில் பிரயாணம் செய்த மற்ற நால்வர்களும் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்தவர்கள் ஆவார்.

விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அதிரை வாழ் இஸ்லாமியர்கள் அவர்களுக்கு வேண்டிய உதவியை உடனிருந்து உதவினர். இறந்த உடல்களை எடுத்துச்சென்ற உறவினர்கள் இஸ்லாமிய சகோதரர்களின் மனித நேயத்தையும், ஒன்றிணைந்து உதவிய மேன்மையான பண்பையும் வியந்து பாராட்டிவிட்டுச்சென்றனர்.

17-08-2013 : அதிரை காட்டுப்பள்ளித் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவின் அருகே நெய்னாப் பிள்ளை அவர்கள் அடங்கிய அடக்கஸ்தலமும் உள்ளது. இவற்றின் மேற்கூரை கீற்றால் அமைக்கப்பட்டு அடக்கஸ்தலத்தைச் சுற்றி சுவற்றால் எழுப்பபட்டு சிறிய குடிலாக காட்சியளித்து வந்தன. கடந்த [ 17-08-2013 ] அன்று அதிகாலை 12 மணிக்கு மேல் ஏற்பட்ட தீயில் அடக்கஸ்தலத்தின் குடில் முற்றிலும் எறிந்து கருகின.  இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

10-08-2013 : கடந்த இரண்டு பெருநாளன்றும் அதிரை நியூஸ் குழுவினரின் பார்வையில் பட்ட ஸ்வீட் பேபிகளின் கலர்  ஃபுல்  புகைப்படங்கள் தளத்தில் பதியப்பட்டு வாசகர்கள் அனைவரின் மிகுந்த வரவேற்பை பெற்றது.

02-10-2013 : தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மார்கெட் பகுதியில்   இன்று [ 02/10/2013 ] இரவு 10.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தொப்பிக்கடை, கோழிக்கடை, சலூன்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள்  முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் தீயில் எரிந்து சாம்பலாகின. இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.


05-09-2013 : இன்று [ 05-09-2013 ] மாலை 4.30 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.


20-10-2013 : அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பாக கடந்த 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை அதிரை லாவண்யா மஹாலில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
26-09-2013 : அதிரை நகரில் பிளாஸ்டிக் பயன்பாடுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை குறைப்பது, நகரில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் ?, நகரில் பிளாஸ்டிக் கேரி பைகளை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கலாமா ? அல்லது தடை செய்யலாமா ?, அதிரை நகரின் வளர்ச்சிக்காக பேரூராட்சியின் சார்பாக என்னென்ன திட்டப்பணிகளை அமல்படுத்தலாம் ? ஆகியன குறித்து மேற்கண்ட விவாதங்களை எடுத்துக்கொண்டு கடந்த [ 26-09-2013 ] அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.


05-11-2013 : ஒரு கிலோ 160 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிராய்லர் கோழி இறைச்சி இன்று அதிசயமாக 90 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.


02-11-2013 : 'சமூக சீர்கேட்டிற்கு காரணம் ?' தகவல் தொழில்நுட்பமா !?   அல்லது மாறிவரும் கலாச்சாரமா !? என்ற இரு வேறு தலைப்புகளில் அதிரையின் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர்கள் இரு அணிகளாக இருந்து மோதும் சூடான விவாதங்கள் அதிரை நியூஸ் சார்பாக நடத்தப்பட்டது. இவை அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றன.


02-12-2013 : அதிரை பேரூராட்சிக்குட்பட்ட 8, 9, 10 ஆகிய வார்டுகளில் கடந்த சில மாதங்களாக போதுமான குடிநீரை விநியோகிக்கவில்லை எனக்கூறி இப்பகுதி மக்கள் திரண்டு வந்து பேரூராட்சி எதிரே உள்ள ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இவை பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.


16-12-2013 : அதிரையில் வறண்டு காணப்படும் குளங்களுக்கு நீர்ஆதாரத்தை கொண்டு வருவது தொடர்பாக அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள். இவை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.


தொகுப்பு : அதிரை நியூஸ் குழு

10 comments:

  1. 2013 வருடத்தின் அதிரையின் அனைத்து உணர்வுச் சுவைகளையும் (உப்பு, உரப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு )அழகாக தொகுத்து வழங்கியது மிகச் சிறப்பு. தரமான வலைதள இதழாக மிளிரும் முயற்சிகள். வாழ்க.

    ReplyDelete
  2. அதிரை நியூசா இல்லை கொக்கா என்று சொல்லும் அளவூக்கு அருமையான தொகுப்பு அமைந்துள்ளது. தொகுப்புகலை பதிவு செயததிர்க்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பதிவு தொகுப்பு அமைந்துள்ளது,

    ReplyDelete
  4. 2013 வருடம் முடிவுக்கு வரும் தருவாய் உள்ள இந்த நேரத்தில் மீண்டும் நம் நினைவுக்கு வரும் படி பதிந்தமைக்கு நன்றி.அருமையான தருனங்கள் புகைபபடங்கள் வாழ்த்துக்கள்

    2014 நமது சமுதாயத்துக்கு நல்ல நாளக இருக்க அல்லாஹு இடம் துவா செய்வோம்.

    ReplyDelete
  5. பதிவு செயததிர்க்கு நன்றி.

    Reply

    ReplyDelete
  6. நினைவு நாடாவைச் சுழல விட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  7. நிகழ்வுகளை மீண்டும் நினைவூட்டி நெஞ்சினில் நிலை கொண்ட அதிரை நியூஸின் அரும்பணி மென்மேலும் சிறந்தோங்க வாழ்த்துவோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.