.

Pages

Wednesday, December 18, 2013

திருச்சி இளம்பிறை எழுச்சி பேரணியில் ஒலிக்க இருக்கும் அதிரையர்களின் அழைப்பு பாடல் ! [ காணொளி ]

திருச்சி இளம்பிறை எழுச்சி பேரணியில் ஒலிக்க இருக்கும் அதிரையர்களின் அழைப்பு பாடல்கள். 
பாடல் வரிகள் : 'கவியன்பன்' அபுல் கலாம்
பாடலை பாடியவர் : 'இளம்பாடகர்' அதிரை ஜாஃபர்

பாடல் 1 :
அச்சமே நீக்கித் துணிவுடன் செல்லு
......அழகிய பாதையில் நில்லு
உச்சமாய் நிமிர்ந்துச் சிகரமும் எட்டு
......உணர்வுடன் பிறைக்கொடி கட்டு
மெச்சியே வாழ்வில் ஏற்றிடும் வண்ணம்
...மேன்மையாய் ஏணியின் சின்னம்
பச்சிளம் படையைப் பகைப்பவர் எவரும்
.....படிப்பினை பெற்றிட வைப்பாய்!

ஏளனம் பேசும் எதிரிகள் முன்னே
.........ஏற்றமும் அடைந்திடு இன்றே
வாளெனச் சொல்லின் போரினால் கூறும்
.......வார்த்தையில் நளினமே சேரு
நாளினைத் தள்ளிப் போடுதல் வேணடாம்
......நமக்கெனத் தாய்ச்சபை உண்டாம்
தோளினைத் திண்மைத் தொடர்ந்திட வேண்டும்
....தோழமை மதித்திட வேண்டும்!

கடித்திடும் பேச்சால் பகைமையைக் கொண்டு
...கட்சியில் பிளவுகள் கண்டு
கெடுத்திடச் செய்யும் இச்சையைத் தூரக்
.....கிடத்திடு; அழித்திடு வேராய்
அடுத்தவர் நலனில் அனுதினம் காட்டும்
.....அக்கறை அன்பினை ஊட்டும்
எடுத்தவுன் உறுதி மொழியினைக் காக்கும்
.....இலட்சியப் பயணம் நோக்கு!

மலைத்திட வைக்கும் இளம்பிறைக் கூட்டம்
.....வலுத்திடும் தலைவரின் நாட்டம்
புலப்படும் வெற்றிக் களிப்பினைத் தேக்கி
.....புறப்படு திருச்சியை நோக்கி
வலுத்தவுன் நேர்மைப் பார்வையில் அஞ்சி
......மாய்ந்திடும் எதிரியும் கெஞ்சி
நிலைத்தவன் துணையால் பேரணி கூடு
........நீஇறைப் புகழைப் பாடு !

நாக்கினில் வாய்மை உடையினில் தூய்மை
......நபிகளார் வழியினில் பசுமைப்
போக்கினைக் கொண்டு படைபல வென்று
,,,,,,போர்க்களம் போலவேச் சென்று
வாக்குகள் அள்ளு வாதமும் வெல்லு
.....வாழ்த்திடும் தலைவரின் உள்ளம்
ஏக்கமாய் மக்கள் நித்தமும் உன்னை
...ஏற்றிட வழியிது உண்மை!




பாடல் 2 : 
பேரணி முழக்கம் இளையவர் ஒலிக்கப்
.....பெரும்புகழ்ப் பெருநகர் ஆங்குத்
தோரணம் போல கூட்டமாய் வீதி
..தோறுமே பச்சையின் வண்ணம்
வீரமும் தொண்டும் நிறைந்துளப் படையின்.
....வெற்றியைக் குறித்திடும் காட்சி
நேரமும் நெருங்கி வந்தது; வாவா
....நேர்மையின் நிகழ்வினை நோக்கி!

இறப்பிலோ நல்ல நிகழ்விலோ எம்மை
....இறைமறை நபிவழி இஜ்மா
மறந்திடா வண்ணம் நடைமுறை செய்ய
....மாண்புள முன்னவர் கூட்டம்
பிறப்புடன் எம்மைத் தொடந்திடும் மஹல்லா
....பிளவிலாச் சேவையைச் செய்யச்
சிறப்புடன் விருதை வழங்கிடும் நோக்கம்
,,,சிலிர்ப்புடன் காணலாம் வாவா!

புலமையோன் அருளால் பெரிதினும் பெரிதாய்ப்
......புகழ்பெறும் தாய்ச்சபை காக்கும்
தலைமையைக் காணத் திருச்சியில் கூடு
....தனிமையாய் ஏணியில் ஏற
நிலைமையைச் சொல்லும் வழிகளைக் கேட்க
...நீள்துயில் நீக்கியே செல்லு
மலையென உறுதி பெற்றிடக் கூறும்
....மாண்புளச் சொற்களைப் பேணு!

1 comment:

  1. மிக அழகாக அடுக்கிய வார்த்தைகள் அழகிய குரலில் வெளிப்படும் விதம் யாவும் அருமை.

    மஹல்லா ஜஅமாத் வலிமைபெற வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனின் தாகம் என்றால், மஹல்லாவில் வாழும் மக்கள் அமைப்பு பிளவுகள் இல்லாது வலிமைப் பெறவேண்டும் என்பதே அதன் நாட்டம் என்பது உண்மை.

    எப்பிரிவும் பாராது அதன் வேண்டுகோளை ஏற்று நாம் பின்பற்றினால் நாம் ஒற்றுமையில் வலிமையுடன் நம் வாழ்வு செழுமை பெரும் என்பதும் உண்மை.

    கட்சியை வளர்க்கவோ ஆட்சியை பிடிப்பதோ அல்ல, மாறாக நம் உரிமையை விடாது பெறுவது ஒன்றுதான் அதன் நோக்கம் என்பதும் உண்மை.

    இன்று நமக்காக ஒரு தாய் ஏங்குகிறாள் என்றால் அது நம் தாய்ச் சபை இந்தியன் முஸ்லிம் லீக் என்பதும் உண்மையே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.