.

Pages

Monday, December 16, 2013

அதிரை சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைப்பு !

அதிரையில் வறண்டு காணப்படும் குளங்களுக்கு நீர்ஆதாரத்தை கொண்டு வருவது தொடர்பாக கடந்த [ 12-12-2013 ] அன்று அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் கூட்டப்பட்ட முதல் கூட்டத்தில் அதிரையில் வசிக்கும் பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையை எவ்வாறு இணைந்து போராடலாம் ? இந்த பிரச்சனையை எந்த முறையில் அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லலாம் ? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் 15 பேரைக்கொண்ட குழுவினர்கள் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை 7.30 மணியளவில் அதிரை பேரூராட்சியின் அலுவலகத்திலிருந்து அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஜமீல் M. சாலிஹ், முத்துசாமி, சுப்பிரமணியன், முஹம்மது அப்துல்லா, அஹமது அமீன், அனஸ், தமீம் அன்சாரி, வீரையன், அன்வர் அலி, வாப்பு மரைக்காயர், ராவுத்தர், மு.க.செ. அபுல் ஹசன், கவுன்சிலர்கள் முஹம்மது செரீப், செய்யது, அதிரை நியூஸ் சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏனைய சமூக ஆர்வலர்களைக் கொண்ட குழுவினர்கள் இரு வாகனங்களில் தஞ்சைக்கு புறப்பட்டு சென்றனர்.



தஞ்சை வந்தடைந்த இவர்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவர்கள் இக்கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறினார். 




கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
இதைத்தொடர்ந்து தஞ்சை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணையமைச்சாருமாகிய S.S. பழனிமாணிக்கம் MP அவர்களின் இல்லத்திற்கு சென்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட பேரூராட்சிதுறை அலுவலர் [ AD ] அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

11 comments:

  1. Sh aslamen nalla muyarchche paratdukkal

    ReplyDelete
  2. முயற்சிக்கு வெற்றியும் முயன்றவர்களுக்கு நன்மையும் அல்லாஹ் தருவானாக!

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    அருமையான கூட்டு சமர்பித்தல்.
    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.
    உரிமையின் அடிப்படையில் பெறவேண்டும.

    செய்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்,
    நல்லதொரு முயற்ச்சி, அனைவருக்கும் பயன் தரக்கூடிய காரியமாக அமையும் இன்ஷா அல்லாஹு, முயற்ச்சி செய்த நல்ல உள்ளம் படைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்,

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்
    இறைவன் உங்கள் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக ஆமீன்
    இதுதாங்க ஒற்றுமை ஜாதி, மதம், கட்சி மற்றும் கழகம் பாகுபாடின்றி நமதூர் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபடும் இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும் மேலும் வாரம்/மாதம் ஒருமுறை நடைபெறும் அம்மா திட்டத்தின் விளைவாக உங்கள் வீடு அல்லது ஊரு தேடி வரும் தாலுகா அலுவலர்களிடம் தமது கோரிக்கை மனுக்களையும் சமர்பிக்கவேண்டும் இதில் எத்தனையோ நமது அதிரை குடும்பத்தில் ஆண்கள் வெளியூளிலும் வெளிநாட்டிலும் வசிப்பதால் பெண்களுக்கு அதைப்பற்றியான சரியான தெளிவும் அறிவும் இல்லாமையாலும் மேலும் வேலை பளு காரணமாகவும் அதிலும் பெரும்பாலான இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் கூட்டமாக இருக்கும் இடமாக இருப்பதால் அங்கே சென்று தமது கோரிக்கை மனுக்களை கொடுக்க வெட்கப்படுவதாலும்
    இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்களும் மற்றும் சமூக சிந்தனையுடைய இளைஞர்களும் ஜாதி, மதம், கட்சி, கழகம் பாராமல் அணைத்து சகோதரர்களும் ஒற்றுமையுடன் நின்று நமது மக்களுக்கு உதவி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்

    ReplyDelete
  6. அல்லாஹ்வின் உதவியோடு முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. முயற்சிக்கு பாராட்டுக்கள், அப்படியே தமிழகத்தினை ஆட்சி செய்துகொண்டு இருக்கும் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கத்தின பார்த்திருக்கலமே, ஊர் வளர்ச்சிக்கு அரசியல்,சமூக அமைப்புகளுக்கு அப்பாற்பட்டது.

    ReplyDelete
  8. அருமையான கூட்டு சமர்பித்தல்.
    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.
    உரிமையின் அடிப்படையில் பெறவேண்டும.

    ReplyDelete
    Replies
    1. அருமையான கூட்டு சமர்பித்தல்.
      எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.
      உரிமையின் அடிப்படையில் பெறவேண்டும.

      செய்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

      குறிப்பு: மேலே உள்ள புகைபடத்தில் வப்பு மறைக்கர் இருக்கிறார். அவர் பெயரில் யார் பதிவு செய்வது????

      Delete
  9. நல்லதொரு முயற்சி பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் இது செயல் வடிவில் வரும்வரை இதே ஒற்றுமையுடனும் முயர்ச்சியுடனும் செயல்பட்டால் தான் பலன் கிட்டும்.

    ReplyDelete

  10. இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்களும் மற்றும் சமூக சிந்தனையுடைய இளைஞர்களும் ஜாதி, மதம், கட்சி, கழகம் பாராமல் அணைத்து சகோதரர்களும் ஒற்றுமையுடன் நின்று நமது மக்களுக்கு உதவி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.