.

Pages

Wednesday, December 11, 2013

அதிரை த.மு.மு.க.மாணவரணி செயலாளரின் வாகனம் மீது தாக்குதல் !

அதிரை வெற்றிலைக்காரத்தெரு பகுதியை சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் த.மு.மு.க வின் மாணவரணி செயலாளராகவும் உள்ளார். தினமும் தனது மாருதி வாகனத்தை வீட்டின் பின்புறமாக நிறுத்தி வைப்பது வழக்கம்.

நேற்று இரவு சுமார் 2 மணியளவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முபாரக் தனது வீட்டின் பின்புறம் சத்தம் கேட்பதை அறிந்தார். உடனே எழுந்து சென்று பார்க்கும் போது வாகனத்தின் கண்ணாடிகள் உடைத்துவிட்டு சில மர்ம நபர்கள் தப்பியோடியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அதிரை நகர ம.ம.க செயலாளர் ஹாலீத் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு காவல்துறையிடம் தப்பியோடிய மர்ம நபர்களின் மீது துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

1 comment:

  1. இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.