.

Pages

Thursday, December 19, 2013

இன்று இரவு தண்ணீர் திறப்பு ! நாளை நமதூர் குளங்களுக்கு வந்தடையும் !

அதிரையில் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு வருவதற்காக கடந்த இரண்டு நாட்களாக வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகின்றன. சிஎம்பி வாய்க்கால் பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவு பெற உள்ளன. இதைத்தொடர்ந்து இன்று இரவு தண்ணீர் திறந்து விடப்பட்டு நாளை குளங்களுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்று வரும் பணிகளை அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி உமர் அவர்கள் மேற்பார்வையிட்டார். அப்போது அரும்பணிகளை மேற்கொண்டு வரும் சமூக ஆர்வலர்களுக்கு தனது வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டார்.










6 comments:

  1. சகோதரர்களுக்கு ....வரவேற்க தக்க இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது.நீர் வருவது சந்தோசமான விஷயம் இதை கொண்டு வர ஊர் ஒன்று பட்டதுபோல் இதன் பங்கீட்டிலும் நமதூர் மக்களுக்கு ஒற்றுமை தேவை .காரணம் செக்கடி ,ஆலடி மற்றும் மன்னப்பங்குளம் போன்ற பெரிய குளங்களுக்கு CMP நீர் முதலில் விடவேண்டும் என்றால் சுரைக்காய் கொள்ளை,புள்ளை குளம் இவற்றிற்கு விவசாய நீர் தாமதமாகவே வந்து சேரும் மேலும் செக்கடி குளம் நிறைந்ததும் அதன் உவரி நீரும் மழை நீரும் சேர்ந்து செட்டியாகுளம் வந்தடையும் ஆனால் தற்போது செட்டியாகுளம் சுத்தம் செய்யப்பட்டு அதன் கால்வாய்கள் கழிவு நீருக்காக மாறியமைக்க பட்டுள்ளது இதனால் குளத்தில் நீர்நிலை இல்லாமல் இங்குள்ள போர் கிணறுகளில் நீர் வற்றி விட்டது இப்படி இந்த திட்டம் ஒரு தொடராகவே போகும் இதற்கு தமிழக அரசின் நீதி ஒதிக்கீடு மற்றும் அரசியல் கால்புனர்ச்சி களைந்து ஊழல் அற்ற செயல்பாடுகளும் மக்களின் பொறுமையும் அவசியம் ......

    ReplyDelete
  2. பல நாள் கனவு நாளை நடக்கும் என்ற எதிர் பார்ப்பு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. ஆத்துகரையில் நான் மீன் பிடித்து விளையாடியது போலவே என் மகனும் விளையாடுவான் போல் தெரிகிறது பார்போம்.... நான் செடியன்குளம் வற்றி பார்த்ததே இல்லை இந்த வருஷம்தான் பார்க்கிறேன் அந்த குளத்திற்கும் நீர் வர இந்த குழு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கம்...........

    ReplyDelete
  4. இத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைத்து ஊர் செழிக்க பாடுபடுவோம். பாடுபட்டோரை பாராட்டுவோம்.

    ReplyDelete
  5. இத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைத்து ஊர் செழிக்க பாடுபடுவோம். பாடுபட்டோரை பாராட்டுவோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.