.

Pages

Monday, December 9, 2013

பிலால் நகரில் சூழ்ந்துள்ள வெள்ளத்தை அப்புறப்படுத்த உதவிய த.மு.மு.க வினர் !

அதிரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர் மழை பெய்து வந்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டிருந்தன. பாதிப்படைந்த பகுதிகளில் பிலால் நகரும் ஒன்று [ இதை செய்தியாக அதிரை நியூஸிலும் வெளியிட்டிருந்தோம் ]

இதை அறிந்த இந்தப்பகுதியின் த.மு.மு.க கிளையினர் ஊராட்சிமன்ற ஊழியர்களின் உதவியுடன் சூழ்ந்துள்ள வெள்ளத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தேங்கி காணப்பட்ட மழைநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டன.

இந்த பணியின் போது ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் சித்திக், த.மு.மு.க அதிரை நகர தலைவர் சாதிக்பாட்சா, பிலால் நகர் கிளை நிர்வாகி நியாஸ் மற்றும் இதர நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது பிலால் நகர் கிளையின் சார்பாக பிலால் நகர் பிரதான பாலத்தின் இருபக்கமும் தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஊராட்சி மன்ற தலைவரிடம் அளித்தனர்.






3 comments:

  1. செய்தி வெளியிட்டவகளுக்கும் தேங்கி கிடந்த நீரை வெளிஏற்றியவர்களுக்கும் அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியை கொடுப்பானகவும் ஆமீன்

    ReplyDelete
  2. உதவி செய்த நல் உள்ளகளுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.