.

Pages

Wednesday, December 25, 2013

அதிமுக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் அவர்களோடு ஒரு நேர்காணல் !

கடந்த 2011 ம் ஆண்டு நடந்த அதிரை பேரூர் மன்ற உள்ளாட்சித் தேர்தலில் கடும் போட்டியில் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் அவர்களுக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளராக புதிய பொறுப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வழங்கப்பட்டதை செய்தியாக அதிரை நியூஸ் வெளியிட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து ஊர் வந்திருப்பதை அறிந்துகொண்ட நாம் காலை பொழுதில் அவரது அலுவலகத்தில் சந்தித்து நமது வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு கீழ்கண்ட நமது கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

1. அதிமுக கட்சி உங்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவின் செயலாளராக பொறுப்பு வழங்கியது குறித்து உங்கள் கருத்து என்ன ?
2. கட்சி வழங்கியுள்ள இந்த பொறுப்பின் மூலம் அதிரை நலன் சார்ந்த என்னென்ன பணிகளை மேற்கொள்ள இருக்கிறீர்கள் ?
3. கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற தங்களின் பங்கீடு எவ்வகையில் இருக்கும் ?
4. இஸ்லாமியர்கள் விடுமுறை தினமாக கடைபிடித்து வரும் வெள்ளிக்கிழமை அன்று சில வேளைகளில் அரசு பொதுத்தேர்வு நடத்திவருவது தொடர்பாக உங்களின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் ?

இதோ அவருடைய பதில்கள்...





6 comments:

  1. அன்புத் தம்பி அப்துல் அஜீஸ் அவர்களிடம் அரசியல் தெளிவைக் காண்கின்றேன்; ஆளுங்கட்சியில் இருப்பதால் உங்களால் நெருங்கிப் பழகும் அமைச்சர்களின் வாயிலாக அதிரைக்குக் கிடைக்க வேண்டிய நற்பலனகளை விரைவாகப் பெற்றுத் தர இயலும் என்ற ந்ம்பிக்கையை இப்பேட்டியின் மூலம் சொல்லி விட்டீர்கள். நம்புகின்றோம்; இன்ஷா அல்லாஹ் நன்மையே நடக்கட்டும். அமைதியான உங்களின் பேச்சு, உங்களின் செயல்பாடுகளும் அமைதியாகவே இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கும். வாழ்த்துகள்; பாராட்டுகள்.

    ReplyDelete
  2. பேட்டியில் தாங்கள் சொல்ல்லியபடி உங்களால் முடிந்த ஊர் நலன்களை நம் சமுதாயத்திற்கு தேவையானவைகளை செய்வீர்கள் என நம்புகிறோம். தாங்கள் பொறுப்பேற்றிருக்கும் மக்கள் நலப்பணி சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அன்புமிகு ஜனாப் அப்துல் அஜீஸ் அவர்கள் மிக கவனமாக பேசுகிறார்கள். இவர்களைக்கொண்டு இவ்வூர் நல்ல பலன்களை நிச்சயம் பெரும் என்ற நம்பிக்கைத் தெரிகிறது. வாழ்க அவர்கள் நலன். வழர்க அவர்கள் தொண்டு.

    ReplyDelete
  4. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை முறையாக கொடுக்கபடாமலும் கிடைக்க தகுதி உள்ளோருக்கு அது கிடைக்க பெறாமலும் தொடர் ஊழல் நடைபெறுகிறது இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக்க படும் மாநாக்கள் பாதியிலேயே படிப்பை விட்டுவிடும் அவலமும் ஏற்படுகின்றது .இதில் மக்களிடம் விழிப்புணர்வும் குறைவு காரணம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவைகளை செய்து வருகின்றன. இதை சரி செய்வதே நன்மையாக அமையும்.

    ReplyDelete
  5. நண்பர் அஜீஸின் தங்கு தடையற்ற பேச்சு நல்ல முன்னேற்றம் சிறுபான்மையினரின் குறைகளை நிறைவு செய்ய வாழ்த்துகிறோம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.