.

Pages

Saturday, December 14, 2013

பாலைவனமாகப்போகும் அதிரை !? ஒன்றிணைந்து போராட முடிவுசெய்த சமூக ஆர்வலர்கள் !!

அதிரையின் ஒவ்வொரு பகுதிகளிலும் காணப்படும் குளங்கள் ஒவ்வொன்றும் பல தலைமுறையைக் கண்டு ஒரு வரலாற்றை எடுத்துச்சொல்லும் அளவுக்கு விசேஷமானவை. இன்றும் ஏதாவது ஒரு குளத்தைக் நாம் காண நேரிட்டால் நமது நெஞ்சம் துடிதுடித்து அக்குளத்தில் நீராடத்தோணும். அதில் குளித்து மகிழ்வோரைக் கண்டு நமது உள்ளம் பூரிப்படையும் ஆனந்தமடையும்.

இக்குளங்களில் உள்ளூர் மக்கள் நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை நம்மூருக்கு வாரி வழங்கக் கூடியவையாகவும் இருந்து வருகின்றன.

கோடை காலங்களில் நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்காதபோது, தாகத்தால் தவித்து விடுகிறோம். குடிக்க மட்டுமல்லாமல் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சமையல் செய்ய என அன்றாடம் தேவைப்படும் தண்ணீரின் அளவு சற்று கூடிக்கொண்டேதான் போகும்.

அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரளாமான கிராமங்களில் ஏரிகளும் குளங்களும் நீரின்றி வறண்டு காணப்பட்டு வருகின்றன. இதனால் இந்த பகுதியில் நடைபெற்று வந்த விவசாயமும் குறைந்து விளை நிலங்கள் அனைத்தும் மனைக்கட்டு நிலங்களாக மாறி வருகின்றன. மேலும் நிலத்தடி நீரும் 150 அடிக்கு கீழ் சென்றுவிட்டன. கடல் அருகாமையில் காணப்படுவதால் நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகும் அபாயமும் உள்ளது.

அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் போதிய நீர் ஆதாரம் குறைந்து எதிர்காலத்தில் பாலைவனமாகிவிடும் சூழல் அமைந்துவிடுமோ என்று அச்சமடைந்த நமதூர் சமூக ஆர்வலர்கள் விழித்துதெழுந்து ஒன்றிணைந்து போராட முடிவு செய்தனர். இந்த முயற்சிக்கு N.M. முஹம்மது அப்துல்லாஹ் மற்றும் M.S. அஹமது அமீன் ஆகியோர் முதன்முதலாக வித்திட்டு அதிரையில் வாழும் ஏனைய சமூக ஆர்வலர்களை ஒன்றிணைக்க முயற்சித்தனர். இதற்காக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் உதவியையும் நாடினர்.

உடனடியாக இவற்றை அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என எண்ணிய இவர்கள் வீணாக கடலில் கலந்துவரும் நீர்ஆதாரத்தை நமதூருக்கு கொண்டு வருவதற்குரிய வழிமுறைகளை அக்கம் பக்கம் கிராமங்களில் வசிக்கும் சமூக ஆர்வலருடன் இணைந்து செயல்திட்டங்களை தீட்டினார்கள்.

இதற்காக நேற்று மாலை அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் கூட்டப்பட்ட முதல் கூட்டத்தில் அதிரையில் வசிக்கும் பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையை எவ்வாறு இணைந்து போராடலாம் ? இந்த பிரச்சனையை எந்த முறையில் அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லலாம் ? என்பது குறித்து ஆலோசித்தனர். இறுதியில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவது என முடிவு செய்துள்ளனர். இதற்காக 15 நபர்கள் கொண்ட குழுவினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக்கூட்டதில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி உமர், அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர் அக்பர் ஹாஜியார், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், அதிரை பைத்துல்மால் செயலர் அப்துல் ஹமீது, சமூக ஆர்வலர்கள் ஜமீல் M. ஸாலிஹ், முத்துசாமி உள்ளிட்ட அதிரையில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.






நீரின்றி காணப்படும் குளங்கள் பற்றிய தலையங்கம் கடந்த [ 28-10-2013 ] அன்று அதிரை நியூஸ் தளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டது. அதில் பதிந்துள்ள நமதூர் குளங்களின் புகைப்படங்கள் சில....












24 comments:

  1. உங்களின் இந்த முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் பிராத்தனை செய்கிறேன்.
    ஊரையும் ஊர் மக்களையும் பாது காக்க வேண்டியது நாம் ஒவ்வொருத்தருடைய கடமை

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்
    நல்லதொரு முயற்ச்சி அனைவரும் இதற்கு ஒன்று படுவோம்...

    ReplyDelete
  3. நல்ல முயற்சி அல்லாஹ் உதவி செயட்டும்

    ReplyDelete
  4. நல்லதொரு முயற்ச்சி அனைவரும் இதற்கு ஒன்று படுவோம்.......

    ReplyDelete
  5. நல்லதொரு முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் ......குளங்கள் மழை நீரால் நிரம்பவில்லை என்பது ஏதோ உண்மையே என்றாலும் ஒரு வீட்டிற்கு இரண்டு மூன்று (போர்கள் )கிணறுகள் வீதம் 150-210 அடிகள் வரை போடப்படுகின்றது இவைகள் தவிர்க்க படவேண்டும்.இது வீட்டின் எல்லைகள் அவரவர்களுக்கு தனி குடும்பம் என்ற வகையில் வகை படுத்தபடுகிறது. இப்படி உறுஞ்சப்படும் நீர்நிலைகள் கழிவுநீராக சாக்கடை மூலம் கடலில் கலக்கிறது இதிலும் மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டும். மேலும் சமீபத்தில் நமதூரில் பட்டுக்கோட்டை சாலையில் குடிநீர் தொழிற்சாலை செயல்படுகிறது இதை வருமுன் தடுத்திருக்கலாம்.கண்மாய் களிலும் ஊரைவிட்டு தூரத்திலும் இருக்கும் இந்த தொழில் ஊருக்கு நடுவில் அமைத்துள்ளது.இதிலும் நீர் நிலை உருஞ்சபடுகின்றது .முன்பெல்லாம் மழை காலங்களில் நிரம்பும் குளங்கள் வருடக்கணக்கில் வற்றாது ஆனால் மழையில் குளம் நிரம்பினாலும் ஊரில் ஆழ்குழாய் கிணறுகள் இருப்பதால் குளங்கள் உடன் வற்றிவிடுகின்றது.முதலில் மக்களிடம் இவைகள் பற்றிய விழிப்புணர்வு வரவேண்டும்.

    ReplyDelete
  6. அரிய இம்முயற்சி நிறைவேறிட
    இதற்கெல்லாம் மூல ஆதாரமாகிய மழையை தேவைகேற்ப பெய்ய அல்லாஹ் நாடிவானாக!

    சகோ. அபூபக்கர் சொன்னபடி தண்ணி தொழிற்சாலையால் அதிரையின் நீர் வளத்துக்கு பாதிப்பு என்றால் அதையும் குறித்த கெடுவில் அப்புறப்படுத்த கலெக்டரின் கவனத்தில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அழைக்கும்
    இன்ஷா அல்லாஹ் நல்லதொரு முயற்ச்சி அனைவரும் இதற்கு ஒன்று சேர்ந்து கண்டிப்பாக படுவோம்.

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    என்ன இது?
    ஆளாளுக்கு பின்னூட்டம்?
    ஊர் எப்படி உருப்படும்?
    ஓட்டை எங்கு இருக்கு?
    யாருக்கு தெரியும்?

    எப்போது நமதூரில் தெரு விட்டு தெரு திருமண சம்பந்தம் நடக்குதோ அன்றைக்கே நமதூருக்கு விமோச்சனம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.

    மாப்பிள்ளை திருச்சி, மணமகள் திருச்செந்தூர். இது எப்படி இருக்கு.

    திருமணம் நடக்குதா இல்லையா?
    குழந்தை பிறக்குதா இல்லையா?

    என்னங்க நீங்க?
    உள்ளூரில் பாகுபாடு பார்த்துகிட்டு.

    ஹயாத்து மவுத்துக்கு மட்டும் ஒற்றுமை, திருமணத்தில் மட்டும் வேற்றுமையா?
    ஊர் நல்லா உருப்படும்.

    இப்போ குளிர்காலம், கருவாடு மொச்சைக்கொட்டை பன்னாமீனு மொளவு தண்ணி வைத்து சாப்பிடுங்க.
    உடம்பு வலி நீங்கும்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  9. பதிவுக்கு சம்மந்தமில்லா பின்னூட்டமாக இருந்தாலும் ஜமால் காக்கா நல்லாத்தான் கேட்டு இருக்கிறீர்கள். திருமணம் செய்து கொண்டு ஒன்று படாவிட்டாலும் தெரு த்தெருவாக ரகம் பிரித்துப் பார்க்காமல் எல்லோரும் ஒன்று பட்டு இருந்தாலே நமதூர் வலிமையுடனும் , ஊர் செழிப்புடன் இருக்கச் செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, சகோ மெய்சா அவர்களே.

      வேறு என்னங்க, நீங்க பாருங்க, வேறு வாய்ப்பேச்சுதான், ஒரு காரியமும் நடக்கலே, காரணம் என்ன, முழுமையான ஒற்றுமை கிடையாது.

      சஹன் சோற்றுக்கு மட்டும் ஒற்றுமை, சம்பதத்துக்கு வேற்றுமை.

      வெளியில் சுற்றும்போது ஒற்றுமை, வெளிப்படையில் வேற்றுமை.

      மற்ற ஊருகளைப் பாருங்க.

      Delete
    2. ஜமால் காக்கா , நீங்கள் சொல்வது 100/100 வாஸ்தவமான பேச்சு, உங்கள் கருத்தினை ஆதரிக்கிறேன்.


      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. சகோ.ஜமால் முகமது ,மொய்ஷா அவர்களுக்கு தரம் பிரித்து சம்பந்தம் கலக்கும் நமதூர் வம்சங்கள் இந்த திருமண விசயத்தில் மட்டும் இது அல்லாவின் நாட்டம் இது சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவது என்று மார்கத்தை தனக்கு சாதகமாக சப்பை கட்டு கட்டுவதும் ஒரு வேடிக்கையான விசயமே ..பதிவிற்கு சம்பந்தமில்லா பின்னோட்டம் இருப்பினும் கருத்திற்கு விளக்கம் அவசியமே ....

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அழைக்கும் சமீபத்தில் நமதூரில் பட்டுக்கோட்டை சாலையில் குடிநீர் தொழிற்சாலை செயல்படுகிறது இதை வருமுன் தடுத்திருக்கலாம் உண்மை இதை கட்டாயம் வேறு இடத்திருக்கு மாற்ற வேண்டும் இத நாள் சுற்றுவட்டாரத்தில் தென்னை தோப்புகளில் உள்ள சிறிய போர்களில் கூட தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. இந்த தொழில்சாலை வந்தபிறகு எல்லர்வீட்டிலும் போர் ஆலபடுத்திகொண்டு இருக்கிறார்கள். இதை கட்டாயம் வேறு இடத்திருக்கு மாற்றவேண்டும்.


    புகாரி தமாம்

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும் சமீபத்தில் நமதூரில் பட்டுக்கோட்டை சாலையில் குடிநீர் தொழிற்சாலை செயல்படுகிறது இதை வருமுன் தடுத்திருக்கலாம் உண்மை இதை கட்டாயம் வேறு இடத்திருக்கு மாற்ற வேண்டும் இத நாள் சுற்றுவட்டாரத்தில் தென்னை தோப்புகளில் உள்ள சிறிய போர்களில் கூட தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. இந்த தொழில்சாலை வந்தபிறகு எல்லர்வீட்டிலும் போர் ஆலபடுத்திகொண்டு இருக்கிறார்கள். இதை கட்டாயம் வேறு இடத்திருக்கு மாற்றவேண்டும்.
      நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி மற்றும் குலத்திற்கு நீர் வரும் வழித்தடமெல்லாம் சாக்கடை வடிகாலாக மாறி உள்ளது இதையும் பெறுராட்சி நிர்வாகம் கவனம் செய்ய வேண்டும்

      ஒருவர் நட்டுவைத்த மரம் மக்களின் பயன் பாட்டிற்காக வெட்டிவைத்த நீர்நிலை பாட சாலைகள் அவர் இறந்த பின்னும் பயனளிக்கும் அவர் மறுமை வாழ்விற்கு -நபி[ஸல்]மொழி

      Delete
  13. குளங்களின் நிலைகண்டு பதறி ஒன்றிணைந்த உள்ளங்களே! அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நற்கூலி தருவானாக! கூட்டம் நடத்தினோம் கலைந்தோம் என்றில்லாமல் செயல்வடிவத்திற்கும் கொண்டுவர இன்னும் அதிகம் உழைத்திட வேண்டுகிறோம். குறிப்பாக இதில் அரசியல் தலைதூக்கிவிடாமல் ஊர்நலன் என்ற பொதுநோக்கில் நம்மை நாம் இணைத்துக் கொள்வோமாக! வெளிநாடுவாழ் சகோதரர்களும் இவர்களுடைய நன்முயற்சிக்கு அனைத்துவகை உதவிகளையும் வழங்கிட முன்வர வேண்டுகிறேன்!

    ReplyDelete
  14. இந்த முயற்சி அதிரையில் உள்ள எல்லாக் குளங்களும் தானே, ஏனென்றால் புகைப்படத்தில் எல்லா குளங்களும் இடம்பெற்றுள்ளன, ஆனால் மனிதர்களில் எல்லா முக்கியஸ்த்தர்களும் இடம்பெறவில்லையே.

    எல்லாக் குளங்களுக்கும் தண்ணீர் வர பாதை எங்கே இருக்குது?

    எது செய்தாலும் உங்கள் நேரமோ அல்லது அடுத்தவர் நேரமோ அல்லது கலக்டர் நேரமோ. யாருடைய நேரமும் வீண் ஆகாமல் செய்ய வேண்டும்.

    பெருமைக்காக செய்யக்கூடாது.

    ReplyDelete
  15. நல்லதொரு முயற்ச்சி அனைவரும் இதற்கு ஒன்று படுவோம்...

    Reply

    ReplyDelete
  16. நல்லதொரு முயற்ச்சி அனைவரும் இதற்கு ஒன்று படுவோம்...

    Reply

    ReplyDelete





  17. நல்லதொரு முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. சலாம்.காலங்கடந்த முயர்சி என்ராலும் பாராட்ட தக்கது, அல்லஹ் நல்ல பயன் தருவானாக

    ReplyDelete
  19. சலாம்.காலங்கடந்த முயர்சி என்ராலும் பாராட்ட தக்கது, அல்லஹ் நல்ல பயன் தருவானாக

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.