.

Pages

Tuesday, December 24, 2013

புறப்படு தோழா ! வெற்றி நமக்கே !! [ காணொளி ]

திருச்சி இளம்பிறை எழுச்சி பேரணியில் ஒலிப்பதற்காக 'கவியன்பன்' கலாம் அவர்களோடு அதிரை ஜாஃபர் அவர்கள் கூட்டணி அமைத்து பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இவை அனைவரின் வரவேற்பையும் - பாராட்டுதலையும் - வாழ்த்துகளையும் பெற்றுவருகின்றது. 

இவர்களின் வரிசையில் முதன் முதலாக புதிய கூட்டணி அமைத்து கவிஞர் நபிதாஸ் அவர்களின் கவிதை வரிக்கு நமதூர் பாடகர் அதிரை ஜாஃபர் அவர்கள் இசையில்லா மெட்டு அமைத்து பாடியுள்ளார். இந்த பாடல் திருச்சியில் நடைபெற இருக்கிற இளம்பிறை பேரணியில் ஒலிக்க இருக்கிறது.

அழைப்பு பாடல் இதோ... 

புறப்படு தோழா ! வெற்றி நமக்கே !! 
ஆட்சிக ளமைப்போ அநேகமாம்
.....அதனிலே அண்ணலின் ஒன்று
காட்டியே வழிகள் தந்தனர் கோமான்
.....கண்டிட வேண்டுமே இன்று
போட்டிகள் கொண்டு போரிடோம் வெளியில்
.....புத்தியில் வெல்லுவோம் என்றும்
மாட்சிமை மஹல்லா ஜமாத்துகள் வலிமை
.....மதியுடன் இயங்கிட வைப்போம்.

களம்நிறை நின்று கருத்துடன் என்றும்
.....கண்ணிய நபிவழிச் செல்வோம்
இளம்பிறை சமூகம் எழுச்சியில் நாங்கள்
.....எங்களின் உரிமைகள் வெல்வோம்
வளம்நிறை ஆட்சி தந்தனர் எங்கள்
.....வலிமை(க்)க லி(ஃ)பாஉமர் என்போம்
உளம்நிறை கொண்டு உத்தமர் காந்தி
.....உண்மைதான் என்றதைக் காப்போம்.

இந்தியா எங்கள் ஆட்சியை ஏற்று
.....இகத்தினில் சரித்திரம் கொண்டோம்
சிந்திய இரத்தம் கொஞ்சமும் அல்ல
.....சீறியே வெள்ளையன் வென்றோம்
முந்தவும் மாட்டோம் பிந்தவும் மாட்டோம்
.....முறையுடன் உரிமையை வெல்வோம்
பந்தயம் வேண்டாம் பகைமையும் வேண்டாம்
.....பற்றுடன் ஒற்றுமைக் காப்போம்.

திருச்சியில் திரண்டு கூடுவோம் அங்கே
.....திக்குகள் தினறிட காண்போம்
விரும்பிடும் அணியில் வெற்றிகள் நிறைக்க
.....வேற்றுமை நீங்கியே நிற்போம் .
அருமைதாய் சபையின் அழைப்பினை ஏற்று
.....அலைகடல் வெள்ளமாய் சேர்வோம்.
பெருமிதம் கொண்டு புறப்படு தோழா
.....பெறுவது வெற்றிகள் என்றும்

பாடல் எழுதியவர் : கவிஞர் நபிதாஸ்
பாடல் பாடியவர் : அதிரை ஜாஃபர்

12 comments:

  1. திரும்ப திரும்ப கேட்க தூண்டுகின்றன...

    தொடரட்டும் உங்களின் புதிய கூட்டணி

    ReplyDelete
  2. இதில் அனைவரும் கலந்து கொள்ளவும் பாகுபாடு பார்க்காமல்.

    ReplyDelete
  3. இதில் அனைவரும் கலந்து கொள்ளவும்

    ReplyDelete
  4. பாடலும் பளிச்சென்ற குரலும் கேட்க இனிமையாய் உள்ளன. அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. எம் பார்வைக்கு வந்துத் திருத்தம் காணும் பொழுதே கணித்தேன்; இந்தப்பாடலை , எங்கள் கூட்டணியின் பாடகர் இளம் முரசு ஜாஃபர் அவர்களால் இலகுவாகப் பாட முடியும் என்று. தொடர்ந்து மரபுப் பாக்களை யாம் பயிற்றுவிக்கும் பயிற்சியில் யாத்திடும் பாடலாசிரியராய்ப் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ள நபிதாஸ் அவர்கட்கும், எங்கள் கூட்டணியின் பாடகர்க்கும் வாழ்த்துகள்.

    நிற்க. “புதிய கூட்டணி” என்னும் சொல்லைத் தவிர்த்தல் நலம்; கொஞ்சம் அரசியல் வாடை அடிக்கின்றதே! யாம் எடுத்த முயற்சியில் இவரும் இணைந்து கொண்டார் அவ்வளவு தானே தவிர, ஏதோ “புதிதாக” ஒரு கூட்டணி என்பது போன்ற தோரணையை “புதிய கூட்டணி” என்ற சொல்லில் தொனிப்பதைக் கவனிக்க வேண்டுகின்றேன்.

    சில வார்த்தைப் பிரயோகம் அதன் உள்ளர்த்தம் புரிந்தவர்களால் எளிதாய் விளங்க முடியும்.

    ReplyDelete
  6. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனை எந்த அமைப்பில் இருந்தாலும் அதன் அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்துக்கொள்வது சமுதாயத்திற்கு நாம் செய்யும் கடமை என்று உணரவேண்டும்.

    அரசியல் களத்தில் நம் தாய்ச் சபை என்ன சொல்கிறது என்று எந்த இயக்கத்தில் இருந்தாலும் தன் கவனத்தை செலுத்தி அதற்கு நாம் தரும் மதிப்பு நாம் யாவரும் அறிந்ததே. எத்தனைப் பிரிவுகள் அரசியலில் ஏற்பட்டாலும் தன்னுள் தன் எதிரியாக பார்க்கமுடியாத நம் தாய் சபை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்பதை சமுதாயத்தில் பற்றுள்ளவர்கள் யாவரும் உணராமல் இருக்கமாட்டார்கள்.

    ஆயிரம் மனத்தடைகள் இருந்தாலும் அனைத்தையும் அழித்துவிட்டு வீருநடைப்போட்டு மாநாட்டிற்குச் செல்லவேண்டும். சமுதாயம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.

    அழைப்புகள் இவ்வாறு வரும்பொழுது அதற்கு மதிப்பளிக்கவேண்டும். வெளிநாட்டில் வாழ்வோர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் ஆண்மக்களை இதில் கலந்துக்கொள்ளும்படி கூறவேண்டும். நமது உரிமைகளைப் பெற்றுத்தரும் நம் அமைப்புகளுக்கு நாமன்றி வேறு யார் ஆதரவு தர இயலும்.

    சமுதாய உணர்வுள்ள சகோதரா ! டிசம்பர் 28 வேன்கள் கிடைக்கவில்லை என்றதொரு பதிவை ஏற்படுத்த உன்னால் முடியாதா ! அங்கு சொல்லப்போவது என்ன ! உனது மஹல்லா ஜமாஅத் வலிமைபெற உனது பங்கு என்ன ! உனது மஹல்லா ஜமாஅத் ஒரு மாபெரும் சக்தி ! அதன் வலிமையான இயக்கம் உனது வாழ்வின் பாதுகாப்பு அரண் ! உனது நிம்மதி வாழ்வு ஒன்றுதான் இந்திய யூனியன் விரும்பும் ஒரே விருப்பம் !

    புறப்படு தோழா ! புறப்படு !! வெற்றி நமதே !!!

    ReplyDelete
  7. >>>>>ஆட்சிக ளமைப்போ அநேகமாம் பாரில் <<<< என்று பாடலை எழுத்தில் கவனித்திடவும். சிறு தவறு ஏற்பட்டுவிட்டது. நன்றி .

    ReplyDelete
  8. ஆயிரம் எழுதினாலும் அனைவரிடம் சென்று அடைய வைப்பது பாடகரே. அதிரைப் பாடகர் இளம் முரசு ஜாஃபர் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அதிரையர் யார் பாடல் எழுதினாலும் அவர் பாட விரும்புவார் என்பது என் கணிப்பு. ஏற்றத் தாழ்வு எதயையும் நோக்காமல் அனைவரையும் சமமாகக் காண்பார் என்பதும் எண்கணிப்பு. அவர் எனது பாடல் "அம்மா" என்ற தலைப்பில் எழுதப்பட்டதை அவர் தன் உணர்வைக் கலந்து பாடியவிதம் மிக மிக அருமை. அதுபோல் என்னால் நாவெடுக்க அழுகையே வருகிறது. உணர்வுகளை உள்ளபடி நம் மனதில் உணர்வாக ஆக்கின்றார். அவரின் எழுத்தில் அவர்களுக்கு நேரம் கிடைப்பது அரிது என்பது அறியப்பட்டது. அதனிலும் அவர்கள் நேரம் பிடுங்கி இதுபோன்ற சமுதாய அர்ப்பணிப்புகள் செய்வது உயர்வு.

    நன்றி ! அதிரை இளம் முரசு ஜாஃபர் அவர்களே !

    ReplyDelete
  9. Arumai...arumai. Appade valththuvathu
    anru thenarenean.anal oru thaekkumakan panna veandeya kadamai athuvo athai kavegkar abulkalam ,jafar,nabethas akeyor pannuvathai vaththukenrean

    ReplyDelete
  10. அனைவருக்கும் நன்றி/ ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.. இதற்கு வித்திட்டவர் கவியன்பன் கலாம் அவர்களே. அவர்களுக்கு அல்லாஹ் மேலும் பல கவிதைகள் படைக்க பிரார்த்திக்கிறேன்..

    வரிகளை சிறப்பாக பாடும் அளவில் அமைத்த நபிதாஸ் அவர்களுக்கும் அதற்கு ஆசானாக இருந்த கவியன்பன் கலாமுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  11. மிக்க நன்றி அதிரை இளம் முரசே! ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா. எனக்கிருக்கும் மனக்கஷ்டங்கட்கிடையிலும் பாடம் படித்துக் கொடுத்தும் , பாடலை உங்களின் வாயசைப்புக்குத் தகுந்த வண்ணம் இலக்கணம்/ வாய்பாட்டு அமைப்புக்குள் உடனுக்குடன் நீங்கள் விரும்பிய வண்ணம் வெள்ளிக் கிழமைக்குள் அனுப்பி வைப்பதற்காக நடுநிசி வரை பாடலை இயற்றுவது எவ்வளவு கடினம் என்பதை நிங்கள் அண்மையில் என்னிடம் அறிவித்தக் கூற்றே சான்றாகும்.

    ReplyDelete
  12. ஒவ்வொரு சமுதாய நலவிரும்பிகள் அனைவரும் எந்தப் பாகுபாடும் பாராமல் இளம்பிறை மாநாட்டில் அவசியம் கலந்துக்கொள்ளவேண்டும் என்பது ஒவ்வொருவரின் உள்ளத்தில் தோன்றாதா ! என்ன !!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.