.

Pages

Saturday, December 28, 2013

வறண்ட குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவர நாங்க பட்டபாடு !?

1995 கடைசியாய் CMP வாய்க்கால் வழியே தண்ணீர் வந்து நம் ஊர் குளங்களை நிரப்பியது. நம்மீது என்ன கோபமோ அதன் பின் நம் ஊருக்கு வராமல் போனது வராமல் போனதை அரசிடம் கேட்டுப்பெறாததால் அழையா விருந்தாளியாக மாட்டேன் என்று அதுவும் இருந்து விட்டது தண்ணீர் வந்த வழித்தடமும் மறைந்தே போனது பேரூராட்சியின் அலட்சியமோ, மக்களின் அலட்சியமோ CMP சாக்கடை வாய்க்காலாய் மாறியது கடைமடை வடிகாலும் இல்லாமல் போனது.
   
அதிரையின் முதல் எழுத்தை கொண்டவரும் தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தை கொண்டவரும் அதிகாலை நடை பயிற்சியில் ஈடுபடுகையில் தொக்காளிக்காடு வழியில் செல்கையில் பள்ளிகொண்டான் to மாளியக்காடு  
வழியாக செல்லிக்குருச்சி ஏரிக்கு நீர் வருவதை கண்டார்கள் இவ்வளவு தூரம் வந்த விருந்தாளியை நாமும் அழைப்போமே வராமலா போவார்கள் என்ற நோக்கோடு முயற்சியை துவங்கி உள்ளார்கள் அதன்பின் நடந்தவைகளை நம் அதிரை நியூஸ் வாயிலாக நம் அதிரையர்கள் அறிந்ததுதான் இன்ஷா அல்லாஹ் அவர்களின் பேட்டியையும் நம் வலைத்தளம் விரைவில் பதியும்.
   
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் குளம் நிறைந்து வருவதாய் கேள்வியுற்று ஊரில் வேலை இருந்தமையால் ஊர் வந்தேன் நம் ஊருக்கு தண்ணிருக்கு தடம் ஏற்படுத்தி கொடுத்த நல்லுள்ளங்களை சந்திக்க விரும்பினேன் இரவு 10 மணி நீர் வரும் நிலைமைகளை தெரிய போன் செய்தேன் வேட்டைக்குத்தான் கிளம்பிக்கொண்டு இருக்கிறோம் என்றார்கள் படுக்கை விரிக்கப்போன எனக்கும் ஆவல் பற்றிக்கொள்ள நானும் வருகிறேன் என்று அவர்களோடு கிளம்பினேன் அங்கே நடந்தவைகளை உங்களிடம் பகர்கிறேன்...
     
செக்கடி குளத்திற்கு தண்ணீர் விழுந்து கொண்டு இருந்தது அங்கே 10 நபர்கள் கூடி நின்று என்ன செய்ய வேண்டும் என்பதை பேசிக்கொண்டு இருந்தார்கள் முதலில் CMP வாய்க்காலில் செக்கடி குளம் ஆலடி குளம் இரண்டிற்கு பிரியும் ஜங்சனில் நிறைய குப்பைகள் வந்து சேர்ந்து இருந்தன எல்லா குப்பைகளையும்  நீக்கினார்கள் தண்ணீர் குறைவாய் வந்து கொண்டு இருந்தது எங்கோ வாய்க்கால் ஓரம் மரம் விழுந்து விட்டதாம் அதற்காக தண்ணீர் அடைத்து வைத்து மரத்தை அப்புறப்படுத்திவிட்டு இப்பொழுதுதான் திறந்து இருக்கிறார்கள் இங்கு வர 6 மணி நேரமாகுமாம் என்று சேர்மன் சொல்லிக்கொண்டு இருந்தார்.
     
சிறிது நேரத்தில் சேர்மனுக்கு போன் வந்தது [ PWD ] தண்ணீர் வேகமாக வந்து கொண்டு உள்ளது உங்கள் ஆட்களை அழைத்துக்கொண்டு தண்ணீர் வரும் வழியெல்லாம் சரிபார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாராம், அங்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன நீ அந்த வழியாக போ நாங்கள் நாலுபேர் இந்த வழியாக வருகிறோம் என்று சொல்ல நான் 4 பேர்களோடு சேர்ந்து கொண்டேன்.
   
கும்மிருட்டு காட்டு  வழி பயணம் குளிர் வண்டிய நிறுத்து நிறுத்து என்ற சப்தம் வாய்க்காலை பார்த்தால் குப்பைகள் மிதந்து வந்தன இருவர் இறங்கி குப்பைகளை அகற்றினார்கள் அங்கே யாரோ மீன் வலை வைத்து இருக்கிறார்கள் 7-8 சிறிய மீன்கள் சிக்கி இருந்தன குப்பைகளையும் வலை தடுப்பதால் தண்ணீர் புதிய வாய்க்கால் ஏற்படுத்தி விடும் ஆகையால் வலையை அறுத்து எறிய உத்தரவு பிறப்பிக்கபடுகிறது உங்கள் கட்டளைய எங்கள் சித்தம் என்று இரு நபர்கள் செயல்படுகிறார்கள்
   
வண்டி அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கிறது நான் முந்தைய அனுபவங்களை வந்தவர்களிடம் கேட்டேன் ஒவ்வொன்றாய் சொன்னார்கள் இவர்களை பார்த்து ஒரு விவசாயி சொன்னாராம் நல்ல காரியம் செய்கிறீர்கள் இந்த வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டு இருந்தாலே போது எங்கள் கிணறுகளெல்லாம் ஊற்றேடுக்கும் ரொம்ப நன்றி தம்பி என்றாராம் மற்றொரு விவசாயி அதிகாரியிடம் நாங்கள் 6 மாதமாய் தண்ணீர் கேட்டு அழைக்கிறோம் எங்களுக்கு வராத தண்ணீர் இப்ப எப்படி வந்தது என்று அவர் பங்கிற்கு உண்டான தண்ணீரை ஒரு மதகில் பெற்று வருகிறாராம்.
       
நதிமூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் நாங்கள் அதிரைக்கு தண்ணீர் வரும் ரிஷி மூலம் அறிய சென்றோம் பட்டுக்கோட்டை முருகையா தியேட்டர் அருகே 20 அடி அகலம் கொண்ட வாய்க்கால் செல்கிறதே அதுதான் நம் ஊருக்கு வரும் தண்ணீர் பாதை அங்கே ஓர் சுவாரஸ்ய சம்பவம் யார் வீட்டோ கல்யாண தோரணம், அலங்கார வளைவுகள் இடப்பட்டு பின் குப்பையாய் அந்த வாய்க்காலில் மிதந்து வந்தது இதை பார்த்த 26 வயது மதிக்கத்தக்க நம்மில் வந்த ஒருவர்[ன்] குபீர் என்று ஆற்றில் குதித்து விட்டார்[ன்] எங்களுக்கு அதிர்ச்சி  டேய் டேய் என்று கரையில் இருந்து ஒருவர் கத்த காக்கா வாழை மரம் மிதந்து போகுது அங்கே போய் அடைச்சிக்கும் என்று சொல்கிறான் மேலே இருந்த அவன் நண்பன் எங்கடா உன்னுடைய போன் என்று சப்தமாக கேட்க அதல்லாம் பத்திரமாக என் எக்கல்ல இருக்குன்னு அப்பாவியாக வாழை மரத்தை கரை வந்து சேர்க்கிறான் சேர்த்த நேரம் இரவு 12.30 டிசம்பர் 23 [ கரை வந்த அந்த பயனுக்கு சன்மானமும் வழங்கப்பட்டது கடலை மிட்டாயும் முறுக்கும் ]
     
அடுத்த சம்பவம் மணி 2 ஒற்றையடி பாதை இருள் சூழ்ந்த இடம் உபாதைகளுக்கு ஒதுங்கிய நாற்றமெடுக்கும் பகுதி 70 வயது மதிக்கத்தக்க முதியவர் தன் வறண்ட தோப்பிற்கு வந்த தண்ணீரில் பங்கு போடுகிறார் நம் பசங்க சப்தம் போட்டுக்கொண்டு பெரியவரே நேத்துதானே சொல்லிட்டு போனோம் மறுபடியும் இப்படி பண்றிங்களே என்று அதட்டுகிறார்கள் அவர் மழுப்பலாய் பதிலுரைக்கிறார் [ தாகம் இல்லார் இவ்வுலகில் உண்டோ ] ஆத்துல போற தண்ணிய அம்மா குடிச்சா என்ன ஆத்தா குடிச்சா என்ன என்று சொன்ன காலமெல்லாம் போயே போயுந்தி.

நடந்த சம்பவங்களில் நம் ஆய்வில் நாம் தெரிந்து கொண்டது கலெக்டரிடம் மனு, ஆபீசர்களின் ஒத்துழைப்பு நல்லுள்ளம் படைத்தவர்களின் பண பங்களிப்பு மட்டும் பத்தவில்லை. இரவு விழிப்பு உடல் உழைப்பு எல்லாம் சேர்ந்தே தண்ணீர் வரும்.
   
கனிவான வேண்டுகோள் தண்ணீர் வருவதற்கு தடம் புதுபிக்கபட்டு விட்டது இனி தண்ணீர் தடையின்றி வருவதற்கு அனைத்து அரசியல் ஆர்வலர்களும் கட்சிக்கு இரண்டு குளங்கள் என்று தத்து எடுத்தாலும் எங்கள் குளங்களும் நிறையும் அதிரையர்களின் மனங்களும் நிறையும்.

மு.செ.மு. சபீர் அஹமது

5 comments:

  1. மனக்குளங்களில் மாசுகளை அகற்றியதால், ஊர்க்குளங்களும் எல்லாம் உடனடியாக நிரம்பி வழியும்; இஃது உங்களின் கடின உழைப்பை என்றும் மொழியும்!

    ReplyDelete
  2. சுவையான தண்ணி கதை.

    முன்னுரிமை பேசுபவர்களும், அரசியலாக்க வந்தவர்களும் இக்கட்டுரையை அவசியம் படித்து அறிய வேண்டும்.

    ReplyDelete
  3. ///கனிவான வேண்டுகோள் தண்ணீர் வருவதற்கு தடம் புதுபிக்கபட்டு விட்டது இனி தண்ணீர் தடையின்றி வருவதற்கு அனைத்து அரசியல் ஆர்வலர்களும் கட்சிக்கு இரண்டு குளங்கள் என்று தத்து எடுத்தாலும் எங்கள் குளங்களும் நிறையும் அதிரையர்களின் மனங்களும் நிறையும்.///

    அவசியமான தொரு அறிவுரையை அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஊர் பற்று உண்மையில் இருந்தால் காழ்ப்புணர்வை விட்டு நமதூரின் நலன் கருதி ஒற்றுமையுடன் செயல் படுவோமாக.!

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. இது நல்ல விசயம்தானே.. ஏன் கிசு கிசு பாணியில் சொல்ல வேண்டும்?
    அது யார் அதிரையின் முதல் எழுத்தையும், தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தையும் கொண்டவர்கள்?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.