.

Pages

Monday, December 16, 2013

லொள்ளு பண்ணும் சாச்சப்பா !?

காலங்காத்தாலே நம்மூர் பேரூராட்சி பக்கமா சுத்தி வரும் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருதே ! உனக்கு மேட்டரு தெரியுமான்னு ? என்னோடு டெய்லியும் வாக்கிங் வரும் நம்ம தோஸ்த் ஜாயிரு என் காதிலே லேசா ஊத.

அட என்னப்பா... குளிர் காலமா வேற இருக்கிறதால சோடியை தேடி வழக்கமா நடமாடுற நாய்களை வீட கொஞ்சம் கூடுதலாதானப்பா ஈக்கிம். ஆனா அதெல்லாம் நம்ம ஊரூ நாயா ஈக்காது... பக்கத்து ஊரான மயிழங்கோட்டை, ஏரிபுறக்கரை, விலாரிக்காடுலேர்ந்து எஸ்கேப்பான நாயா இருக்கும். அதான் நாய்களை கொல்லக்கூடாதுன்னு சட்டம் போட்டதாலே நாய்களை புடிச்சி குடும்ப கட்டுப்பாடு செய்றாங்களே. பயப்படாதே ! நிசமா இதுக கடிக்காது !? இம்புட்டு நாளைக்கும் யாரையாவது கடிச்சிருக்கா ? ன்னு கேள்வியே கேட்டு லைட்டா உசுப்பேத்த...

அட நீ வேறப்பா... கடிச்சா கூட பரவாயில்லே தொப்புலே சுத்தி 16 ஊசி போட்டுக்கலாம்.. ஆனா நாய்களுக்கிடையே ஏற்படும் கோஸ்டி சண்டையிலே நாமல்லப்பா பாதிக்கிறோம். ஒன்னா சுத்துங்க எப்ப பிரியுது ? எப்ப சேருதுங்கிறதே தெரியல... ஆனா சரியான நேரத்திலே சொல்லி வச்சாப்லே ஒன்னாயிடுதுங்க... வேணும்டா டெய்லியும் பேரூராட்சி பக்கமா வந்து பாரு, ஒரே இடத்தில் 5, 6 நாய்கள் சேர்ந்து சுத்தி வருது. இந்த நாய்யெல்லாம் நம்மை கடிச்சிடுமோங்கிற பயத்திலே தப்பிக்க வேகமா செல்லும் நம்மாளுவோ தவறி விழுந்து காயங்கள் ஏற்பட்டுடுதாம், அதேமாதிரி வாகனமும் விபத்தாயிடுதாம்

ஏம்பா ஜாயிறு, நாயை வளக்கிறவங்க முறையா பராமரிக்க மாட்டாங்களா !?இப்புடி தெருத் தெருவா சுத்த உட்றாங்ளே...

அட நீ வேறப்பா இதெல்லாம் வந்தா வரத்து நாய்களப்பா... ஊரு நாயா இருக்காது... அதான் ரவுண்ட்ஸ் கட்டி சுத்தி திரியுதுங்க

அப்பிடித்தேன் முந்தாநாளு காலையிலே மாட்டாஸ்பத்திரிகிட்னே கிடந்த செத்த கோழியை ருசி பார்க்க நாய்களுக்குள்ளே கடும் போட்டிப்பா... பயங்கரமா குரைக்குதுங்க... நீயா ? நானா ? ங்கிற போட்டி வேற... சிவப்பு நாய்க்கு கிடைத்த பங்கை கருப்புக்கு பிரிச்சி கொடுக்கிலேங்கிற ஆத்திரம் வேற

பேப்பரு வாங்க வந்த நம்மாளுவோ இதுக போட்ட சத்தததையெல்லாம் கேட்டுகிட்டு கண்டுக்காம கம்முன்னு நிக்கிறாங்க ! அங்கே நின்ட நான் நாளோடு அஞ்சான்பேரா சும்மாருக்கப்பிடாது... பெரிய பருப்பு மாதிரி ஒரு கம்பை தூக்கி தில்லா அதட்டுனேன்ப்பா... சொல்லி வச்ச மாதிரி எல்லா நாயும் பயந்துகிட்டு எஸ்க்கேப்பாயிடுச்சி !? அந்த இடமே இப்ப கப்புசுப்புண்ணு அடங்கி போய் கிடக்கு.

அதாவது பராவாயில்லே... இதே கேளு முதல்லே... நேத்து காலையிலே பஸ்டாண்டுலே பஸ்ஸுக்கு காத்திருந்தாங்க ஒரு அம்மா. அவங்க கையிலே பொட்டலம் ஒன்னு வச்சிருந்தாங்களா... அந்தப்பக்கமா வந்த நாய் பொட்டலத்தை மோப்பம் புடுச்சுட்சி...  வொடனே கிட்னே வந்து புடுங்க தாவுது... அந்த அம்மாவும் கையை தூக்கி தூக்கி மேலே உசத்துறாங்க.. நிண்ட நாயும் விடாமே எவ்வி எவ்வி குதிக்கீது. பதிலுக்கு அந்தம்மா அப்புடியே பம்மிட்டாங்கப்பா

ப்பூ !

இப்புடி பயமுறுத்தும் நாய்களுக்கு

என்ன திமிரப்பா !?

டிஸ்கி : அது சரி... சாச்சப்பானு தலைப்பை வைச்சிட்டு தெரு நாய்களைப்பத்தி குறிப்பிடுறிங்கெலேன்னு வாசிக்கும் நீங்க கேக்கிறது எங்க காதிலே நல்லாதேன் விழுது..

அது ஒண்ணுமில்லிங்க...

அதிரையில் உள்ள பெரும்பாலான தெருவிலே வசிக்கும் நம்மாளுங்க வழக்கமா நாய்களை 'சாச்சப்பா' ன்னு குறும்புத்தனமாஅழைப்பாய்ங்க அதேன் நாமளும் ஹி..ஹி..ஹி :)

அபூ இஸ்ரா






6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. லொள்ளு சூப்பர் !

    இந்த நாய்களே இப்படித்தான் ஈக்கும். அதுவும் பஸ் ஸ்டாண்டு அங்கேதான் லொள்ளு அதிகம்.

    ReplyDelete
  3. பேரூராட்சி, அதிரையில் வாழும் அனைத்து ஜீவன்களுக்கும் உரியது என நினைத்து மாடு மற்றும் நாய்கள் மீட்டிங் போட வரலாம்!

    அதிரை பேரூராட்சி குறித்த போர்டில் இது மனிதர்களுக்கு மட்டும் என போடனும்!


    மாடுகள் சாலைகளில் திரியக் கூடாது என்ற சட்டம் வாபஸ் வாங்கி விட்டார்களா?

    மனிதர்களை கொல்லவும் பயமுறுத்தவும் செய்கிறது என நாய்களை கொல்ல தடுக்கும் இயக்கதில் மனுச் செய்து நாய்களை தாய்லாந்துக்கு அனுப்பினால் மனிதர்களுக்காவது பலன் கிடைக்கும்!

    ReplyDelete
  4. நல்லா பாருங்க சகோதரரே அது நாய் போல ஈக்கிம் ஆனால் நாய் இல்லை வெவரம் தெரியாம ஒரு போஸ்ட் போட்டு வீனடிச்சிபுட்டியலே


    மாடு தான் ஏலம் விடலாம் புடிச்சி கட்டினா ஏதாவது தேறும் .பேரூராட்சி ஊழியர்களும் முன்பு நாயை (நல்லா கவனியுங்க நாயை நிச நாயை )பிடிச்சி சுருக்கு போட்டு இழுத்து போனது போல மாட்ட இழுத்து போனாங்க

    இந்த நாய் போல உள்ள நாயை புடிச்சி என்ன பண்ண போறாங்கன்னு வுட்டுடாங்க .ஆனா இந்த நாயை போல உள்ள நாய் புடுங்கி துன்னுதே .ஒருவேளை நாயா இருக்குமோண்டு நமக்கு பயம்மாகிது

    ReplyDelete
  5. ஊருல இந்த நாயிங்க தொல்ல அதிகமா ஈகிரதால சின்ன பசங்க சுபு தொழுவ பள்ளிவாசலுக்கு போவக்கூட பயப்புடுராங்க . இதுகள ஒழிக்க நம்ம பஞ்சாயத்துபோர்டு தலைவரு ஏதாவது நடவடிக்க எடுக்கப்புடாதா..!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.