.

Pages

Sunday, December 22, 2013

அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை அவர்களோடு ஒரு நேர்காணல் !

அதிரை சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள வறண்டு கிடக்கும் குளங்களுக்கு நீர்ஆதாரத்தை கொண்டு வருவதற்காக சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்தனர். இவர்களின் முயற்சி பாராட்டுகுரியது.

அதிமுகவினரும் தங்களின் முயற்சியாக அதிரை நகர மக்கள் பயனடையும் விதத்தில் குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் விதமாக வெண்டாக்கோட்டை ஏரியிலிருந்து மளவேணிகாடு வழியாக நமதூருக்கு கொண்டு வர முயன்று வருவதை அதிரை வலைதளங்களில் [ அதிரை போஸ்ட், அதிரை நியூஸ் ] செய்தியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன.

இந்த செய்தியை வாசித்த வாசகர்களுக்கு அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தெளிவற்று காணப்பட்டதால் சிலருக்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் உண்மை நிலவரம் குறித்து அறிந்துகொள்ள அதிரை நியூஸ் வாசகர்களும் ஆர்வமாக இருந்து வந்தனர். வாசகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்வது நமது கடமை எனக் கருதி அதிமுக நகர செயலாளரும், அதிரை பேரூராட்சி துணைத்தலைவருமாகிய திரு. பிச்சை அவர்களை அதிரை செய்திகளை வழங்கி வரும் செய்தியாளர்களோடு அவர்களின் வீட்டிற்கு சென்று விளக்கத்தை பதிவு செய்துகொண்டோம்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளில் குறிப்பிடதக்க சில...
அதிரையின் வறண்ட குளங்களுக்கு நீர் ஆதாரத்தை கொண்டுவர அதிமுக சார்பாக முயற்சித்து வருவதாக செய்தி வெளியாயின. நீங்கள் செய்து வரும் இந்த பணிகள் குறித்து உங்களின் விளக்கத்தை அதிரை நகர மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்...

அதிமுகவினர் அதிரை நகர வளர்ச்சியின் திட்டபணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ? 

பேட்டியின் போது அதிமுக நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, பேரூராட்சியின் 3 வது வார்டு உறுப்பினர் சிவக்குமார், அதிமுக கழக முன்னோடி ஹாஜா பகுருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
இனி அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் திரு. பிச்சை அவர்களின் நேர்காணலைக் காண்போம்...

அதிமுக மேற்கொண்ட முயற்சியின் பலனாக கடந்த அன்று [ 16-12-2013 ] தேதியிட்டு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திலகவதி அவர்களுக்கு உதவி செயற்பொறியாளர் இக்பால் அவர்கள் அனுப்பிய கடிதத்தின் நகல். 

26 comments:

  1. இரவில் பைக் வெலுச்சத்தில் அவசர அவசரமாக போட்டே எடுத்துப்போடுவது விளம்பரம் இல்லையா?

    ReplyDelete
  2. பரவாயில்லை.
    எங்கள் முயற்சியில் அவர் புகுந்துவிட்டார் என சொல்லாமல் நாங்களும் ஒரு திசையில் செய்கிறோம். அவரும் செய்கிறார் என்று சொல்வது பாரட்டத் தக்கது.

    நீங்க சொல்ற மாதிரி அந்த பஞ்சாயத் போர்டு பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் நீங்களும் சேர்ந்து ஒரு அன்லிமிடெட் பொது கம்பெனி போல் செயல் பட்டால் இன்னும் அதிரை அதிகம் பலன் பெறுமே!

    நாங்க நினைத்தால் ஒரு துளி கூட அவர் செய்ய முடியாது என சொன்னது மட்டும் உங்க தவறு. தவிர்க்க வேண்டிய கருத்து.

    அதிரை நியூசை சாட காரணம் அதன் நடத்துனர் சமூக ஆர்வலர்கள் செய்யும் செயலை முழுமையாக அறிந்து இருக்கும் போது அதிமுக வின் செயல்பாட்டு செய்திகளை அதிகாரப்பூர்வமாக அறியாமல் வேறொரு தளத்தை அடிக்குறிப்பிட்டு செய்தி வெளீயிட்டதுடன், நீங்க சொன்ன மாதிரி அதிமுக வின் முயற்சி வேறு சமூக ஆர்வலர்களின் முயற்சி வேறு என செய்தியில் குறிப்பிடப்படாததே காரணம்.

    நீங்களும் அதிரையின் நலனில் அக்கரையாக சொல்கிறீர்கள் அதனால் இருகரம் இணைந்து செயல்படுங்கள். இன்னும் இரண்டரை வருடம் கழித்து திமுக வா அல்லது அதிமுக வா என்பதை பலம் பார்த்து கொள்ளலாம் அதுவரை இரு கரம் இணையுங்கள். ஊர் வளம் பெறட்டும்.

    ReplyDelete
  3. திரு பிச்சை . அவர்களின் பேட்டி எங்களை சற்று தெளிவு படுதிஉல்லது ரொம்ப நன்றி !
    உங்களுடைய விளம்பரம் இல்லா மக்கள் பணி அதிரைக்கு தேவை.
    அஸ்லம் காக்கா அவர்ஹளும் இவர்ஹளோடு கட்சியை மறந்து இணைந்து செயல் பட்டாள் இன்னும் நல்ல பணிஹளை செய்யலாம் .

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. திரு பிச்சை சரியாதானப்பா சொல்றாரு, அப்போ அதிரை நியூஸ் இவங்க செஞ்சத செய்தியா போட்டதுல தப்பில்லப்பா..

    இவரு சொல்றத பாத்தா நம்மூருக்கு நிரந்தரமா தண்ணீ வர்றத்துக்கு ஏற்பாடு பண்றாங்க போல.. நல்லது தான், செய்ங்க..செய்ங்க..

    சேர்மன் தேவையில்லாம இவங்கள போய் சாடி பேசிட்டாராப்பா, பிச்சை சொல்றது மாதிரி கொஞ்சம் அவசரப்பட்டுட்டாறு போல.. நல்லா விசாரிச்சிட்டு பேட்டி கொடுத்ருக்கலாம்.. நல்லது பண்றதுல போட்டி போடறாங்க நல்லதுதான்.
    பிச்சை ஆளுங்கட்சிய சேர்ந்தவரா இருந்தாலும் ரொம்ப பெருந்தன்மையா அரசியல் நாகரித்தோட பேசிருக்கிராறு, அவர நிஜமால பாராட்டனும்ங்க..

    என்னது.. சேர்மனுக்கு அவர சுத்தி சுத்தி கேமரா புடிக்கணுமா? பஞ்சாயத்து போர்டு ப்ரைவேட் லிமிடட் கம்பெனியா? அப்புடிலாம் சொல்லாதீங்க ப்ளீஸ்...

    திரு ஜெஹபர் சாதிக், நீங்க சொல்றது மாதிரி
    //நாங்க நினைத்தால் ஒரு துளி கூட அவர் செய்ய முடியாது என சொன்னது மட்டும் உங்க தவறு. தவிர்க்க வேண்டிய கருத்து.// சரி இதுகோட யாரும் சொல்ற வழக்கந்தான், இருந்தாலும் திரு பிச்சை அத தவிர்த்திருக்கலாந்தான்.. ஆனா நம்ம சேர்மன் சார் பேச்சுல தனி மனிதன தாக்கி ரொம்ப ஆக்ரோஷமா பேசிருக்காரே, நீங்க நியாயமா அதுக்கும் உங்க அதிருப்த்திய தெரிவிச்சிருக்கலாமே.. புரியலன்னா சேர்மன் சார் பேசினத திரும்ப பாருங்க ப்ளீஸ்.. மறந்துட்டா பரவாயில்ல..

    சரி.. இனி நாம நம்ம வேலைய பாப்போம்.. அடுத்தாப்ல வர்ற செய்தில சிந்திப்போம்... வரட்டா....

    ReplyDelete
    Replies
    1. Pls comment in ur real name...Dont u have name?

      Delete
  6. மக்கள் குரல் அதன் முகம் அதன் நிர்வாகி முகம் தெரிந்தால் என்னால் இனிய சலாத்துடன் பதிலளிக்க முடியும்

    ReplyDelete
  7. திரு .பிச்சை அவர்கள் பேட்டியில் பேரூர் மன்ற தலைவரின் செயல்பாடுகளால் நிதி ஒதிக்கீடுகள் குறைத்து கிடைக்க பெறுவதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இதுவும் ஒரு பழிவாங்கும் செயலே .அப்படி என்றால் அம்மாவின் ஆட்சியில் மக்களை போய் சேரவேண்டிய செயல் பாடுகள் நேரடி ஆய்வு மூலம் கிடைக்க செயலாக்கம் இல்லை போலும்???? இந்த நிதியை ஊருக்கு அவரின் செல்வாக்கில் பெற்று தந்தால் ஊரில் அம்மாவின் கட்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்பதையும் திரு .பிச்சை விளங்கிகொள்வது நலமே .மக்கள் பனி செய்ய அ தி மு க விற்கு விளம்பரம் தேவை இல்லை என்று திரு .பிச்சை அவர்கள் சொல்வதன் மூலம் அவருக்கும் அவர் கட்சிக்கும் ஒரு தனித்துவத்தை கொடுத்துள்ளது இது பாராட்டக்கூடிய செயல் .

    ReplyDelete
  8. நல்லது நடந்தால் சரிதான் பாகுப்பாடுபார்க்கவேண்டாம் யாரும்.

    ReplyDelete
  9. உண்மையான முயற்ச்சிக்கு அல்லாஹ்விடம் கூலி நிச்சயம் வாழ்த்துகள்

    நாங்கள் இருவரும் செய்கின்ற முயற்ச்சிக்கு இறைவனிடம் பிராத்திக்க சொல்லி இருக்கிறீர்கள் [இன்ஷா அல்லாஹ் துஆ செய்கிறோம்]

    நீங்கள் சம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற கவுன்சிலரின் ஆதரவோடும் து.சே.இருப்பதால் சேர்மன் அவர்களின் முயற்ச்சியில் நீங்களும் பங்கு கொண்டிருந்தால் பட்ட கடன் தீர்ந்திருக்கும் பிறகு உங்களது மற்றும் அ.தி.மு.க.வினரது தெற்கு நோக்கி தண்ணீர் கொண்டுவரும் முயற்ச்சியை செய்து இருக்களாம் [ஒரு கல்லில் ரெண்டு மாங்கா]

    நாங்கள் நினைத்து இருந்தால் ஒரு பக்கட் மண் கூட அள்ளி இருக்க முடியாது என்று சொல்லி இருக்கின்றீர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்மன் செயல்பாட்டை து.சே.தடுக்க முடியுமா? உங்கள் பேச்சு சரியாக விளங்கவில்லை

    எது எப்படியோ உங்களது முயற்ச்சியால் கூடிய விரைவில் அதிரை குளங்கள் நிறைந்தால் நிச்சயமாக அதிரையர்களால் பாராட்டப் படுவீர்கள்

    ReplyDelete
  10. என்ன கொடுமை சார் ..........

    நீங்கள் சொல்லுவது போல் சேர்மனின் அணுகுமுறை சரி இல்லை என்றால்....?

    அடுத்து இருக்க கூடிய துணை சேர்மனின் அணுகுமுறைக்கு அதுவும் ஆளும் கட்சியை சார்ந்த உங்களின் தயவில் நமதூருக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கலாமே?

    ReplyDelete
  11. திரு பிச்சை அவர்களின் பேச்சில் தெரிகிறது அவரின் அரசியல்.. சரி சேர்மனால் நிதி ஒதுக்க முடியவில்லை என்றால், ஆளும் கட்சியில் இருக்கும் நீங்கள் பெற்று தரலாமே?? பிடிவாதத்தை விட்டு விட்டு சேவையில் இறங்கவும்

    ReplyDelete
  12. பக்குவப்பட்ட அரசியல்வாதியின் பேட்டி...
    திருப்தி தருகிறது

    ReplyDelete
  13. நம்ம சேர்மன் கக்கா விளம்பரம் பிரியர் என்பது எல்லோர்ருக்கும் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி ஷைக் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் உங்களுக்கு ஊர் நிலவரம் தெரியாது என்று நினைகிறேன்.அவரை பொறுத்தவரை மக்களுக்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாக்காமல் நல்லது செய்ய நினைக்கிறார்.அதை யாராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது.இருந்தும் அவர் அணைத்து பேட்டிகள் போன்ற அனைத்தையும் நிஜாமை அணுகி அதிரை நியூஸ் சில் மட்டும் தான் கொடுத்து வந்தார்.அவரது உறவினர் பையன் தலைமையில் ஒரு இணயதளம் இயங்குவதாகவும் கேள்வி பட்டேன் அதில் கூட அவரின் எந்த பேட்டியும் வருவதாக தேறிய வில்லை .ஊரில் இனைய தல போட்டி அதிகளவில் உள்ளது .இப்போது பள்ளி சிறுவர்கள் எல்லாம் தளம் ஆரம்பித்து முன்னணிக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற பரப்பரபான பேட்டியை எடுத்து விடுகின்றனர்.இதனால் ஏற்படும் விளைவுகள் அரசியல் பூகம்பமாக வெடிக்கிறது.

      Delete
    2. அண்ணன் அதிரை ஹாஜி
      கடந்த ஆறு மாததிற்கு முன்பு அமெரிக்கா வந்தவன் நான். இதற்கு முன்பு அதிரையில் பல வருடங்களாக இருந்த ஊரில் நடக்கும் அரசியல் நெளிவு சுளிவுகளை நன்கறிந்தவன். அசலம் விரோத போக்கை கடைபிடிப்பவர் என்பதற்கு உதாரணம் ஒன்றை உங்களுகு சொல்கிறேன்

      சென்ற வருடம் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மராத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தினோம. சேர் மண் என்ற முறையில் அசலம் அவர்களை சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்துகொள்ள அழைத்தோம். அனைத்து முஹல்லா ஜாமது தலவர் சேக் காக்கவையும் அழைத்தோம். நோட்டிச அடிக்கும் போது வயதில் மூத்தவர் பெயரை முதலிலும் அடுத்தடுத்து இளைவர்களின் பெயரை அதில் குரிபிட்டோம்.

      அசலம் எங்கள் விழாவை புறக்கணித்தார் பிறகு அவரது நெருங்கிய நண்பரிடம் விசாரித்தோம். சேக் பெயரை முதலில் நோட்டிசில் போட்டதற்காக வரவில்லையாம் என்று கூறினார். அதிர்ச்சியடைந்தோம் இந்தலவு குறிகிய மனப்பான்மை உள்ளவரா என்று.

      இவரை பற்றி நல்லவிதத்தில் நிஜாம் தான் உலகிற்கு எடுத்து சென்ரார். அவரையை தாக்கி பேட்டி அளிப்பது அவரது சுயநலம்தான் வெளிப்பட்டுள்ளது. அவருக்காக நீங்கலும் பறிந்து பேசி வருகீரிகள். நாளை உங்களுக்கும் இந்த நிலை வரலாம். கவனமாக இருங்கள் உங்களையும் அவரின் சுயனல்திற்குகாக பயன்படுத்த நினைத்து இருக்கலாம்.`

      Delete
  14. தம்பி ஷைக் அவர்களே அப்படி இருந்தால் உங்களின் பெயருக்கு அருகில் உள்ள USA யும் ஒரு விளம்பரமே .......அதெல்லாம் போகட்டும் வசந்த் & கோ காலண்டரை பாருங்கள் வருஷம் 364 நாட்களிலும் உள்ள தேதிகளில் அந்த வசந்த குமார் அவர்களின் புகைப்படம் இருக்குமே.இதை போய் எந்த விளம்பரத்தில் சேர்க்கிறது ???????????

    ReplyDelete
    Replies
    1. அபூபக்கர் காக்க அவர்களே என் பெயர் அருகில் USA என்பது இருபிடத்தை குறிக்கும். உங்க பெயரருகில் இறுப்பது can என்றால் என்ன?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. சகோ .Saik USA அவர்களே பெரியவர்கள் மதிக்கப்படவேண்டும் egoism என்பது எல்லா மனிதர்களிடமும் உள்ளது இது எழுத்தாளர், பத்திரிகை, அரசியல் தனியார் கம்பனிகள் என்று அடுக்கிகொண்டே போகலாம் நோட்டீஸ்கள் அடிப்பது பதவிகளை வைத்தே தவிர முதியவர்களை வைத்து அல்ல.ஒவ்வொரு விழாக்களிலும் chief Guest என்று ஒருவர் இருப்பார் அவரே முன்னிலை படுத்தபடுவார்.ஊரின் அரசியல் நெளிவு சுளிவுகள் தெரிந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருகின்றீர்கள் அப்படிஎன்றால் இதெல்லாம் அரசியல் நெலுவு சுளிவில் உள்ளதுவே .நமக்கு ஒருவரை பிடிக்க வில்லை என்பதற்காக அவர்களை அதிகம் விமர்சிப்பதை தவிர்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் அரசியல் கட்சி நடத்த நாங்கள் அவரை அழைக்கவில்லை பரிசளிப்பு
      விழாவிற்க்கு தான் அழைத்தோம்

      Delete
    2. shaik, please do not waste your time......

      Delete
  17. நிறைய உண்மைகளின் அர்த்தம் வெளிச்சத்தில் மின்னுகிறது.
    பாவம் கண்டனம்தான் அதன் அர்த்தத்தை இழந்து நிற்கிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.