அதிரையில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களிடம் அன்னியோன்யமாக பழகிவரும் இவருக்கு இன்று அதிகாலை 3.45 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் இறந்தவரின் உடலை எடுத்துச்செல்வதற்காக அருகில் உள்ள த.மு.மு.க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை அனுப்ப கேட்டுள்ளனர். த.மு.மு.க வாகனம் பராமரிப்பு பணிக்காக வொர்க்சாப் சென்றுள்ளது என்ற தகவலை அடுத்து அதிரை பைத்துல்மால் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு வாகனம் அனுப்ப கேட்டுள்ளனர். அங்கிருந்து வாகனம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதை கவனத்தில் கொண்ட அதிரை நகர த.மு.மு.க வினர், மதுக்கூர் கிளையினரை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்ப கேட்டுக்கொண்டனர். இதையடுத்து இன்று காலை 8.15 மணிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் அதிரைக்கு வந்தது. இதன்பிறகு இறந்த உடலை ஏற்றிச்சென்று உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அஜ்மீர் ஸ்டோர் சாகுல் ஹமீது, அதிரை நகர த.மு.மு.க / ம.ம.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் உடனிருந்து உதவினர்.
இறந்த உடலை எடுத்துச்சென்ற உறவினர்கள் இஸ்லாமிய சகோதரர்களின் மனித நேயத்தையும், ஒன்றிணைந்து உதவிய மேன்மையான பண்பையும் வியந்து பாராட்டிவிட்டுச்சென்றனர்.
Asssalamu Alaikum sahothararhale thayavu seithu peyarayo ill iyakkam peyarayo kurupidamal muslim sahothararhal seitharkal endru kurupidungal ithai parthu oru matru matha karaarkal islathirku vara vaaipukal ullathu.
ReplyDeleteAsssalamu Alaikum sahothararhale thayavu seithu peyarayo ill iyakkam peyarayo kurupidamal muslim sahothararhal seitharkal endru kurupidungal ithai parthu oru matru matha karaarkal islathirku vara vaaipukal ullathu.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் கலந்த துக்கத்தை தெரியப்படுத்துகின்றேன்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
/////அதிரை பைத்துல்மால் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு வாகனம் அனுப்ப கேட்டுள்ளனர். அங்கிருந்து வாகனம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.///////
ReplyDeleteஇந்த விஷயம் என்ன சொல்ல வர்றீங்க