அழைக்கிறார் ! அழைக்கிறார் !
தக்பீர் சொல்ல அலைக்கிறார் !
தரணி வெல்ல அழைக்கிறார் !
முஸ்லிம் லீக்கின் முன்னேற்ற கீதம் !
முழங்கிட நம்மை அழைக்கிறார் !
முனீருல் மில்லத் அழைக்கிறார் !
முன்னேறி வாதம்பி அழைக்கிறார் !
நாரே தக்பீர் ! அல்லாஹு அக்பர் !
முஸ்லிம் லீக் ! ஜிந்தா பாத் !
மஹல்லா ஜமாஅத் ! ஜிந்தா பாத் ! (அழை)
காயிதெ மில்லத் கண்டிட்ட பாதை
கர்ஜித் சிராஜுல் கொண்டிட்ட பாதை
இலட்சிய மெல்லாம் கண்டிடும் பாதை
இன்னுயிர் இஸ்லாம் காத்திட வாநீ ! (அழை)
முஹல்லா ஜமாஅத்தை ஒருங்கினைத் தாள்வோம்
ஒற்றுமைக் கயிற்றைப் பிடித்துயர் கொள்வோம்
பள்ளிவாசலே மையமே நமக்கு
பஞ்சு பஞ்சாய்ப் பிரிவதை ஒதுக்கு ! (அழை)
திருமணச் சட்டம் காத்திட்ட வீரர்
இறைவன் இல்லம் இணைத்திடும் தீரர்
பிறப்பும் இறப்பும் பராமரிக்கும்
சிறப்பில் உயர்ந்த சீரிய தலைவர் (அழை)
பைத்துல் மாலை நிறுவிய லீக்காம் !
பஞ்சம் துரத்திடும் ஏழையின் லீக்காம் !
வயிற்றுப் பிழைப்பு மட்டுமா வாழ்க்கை ?
வந்து பாரு லீக்கின் போக்கை ! (அழை)
மற்றவர் தயவை ஏன் நாடுகின்றாய்
மதிக்கும் ஷரீயத் பஞ்சாயத் திருக்க,
குற்றம் புரியும் பரம்பரையா நாம் ?
கொள்கையில் பிடிப்புக் கொண்டிட வேண்டி (அழை)
நபிபெருமானும் காட்டிய மருத்துவம்
நாடிடும் லீக்கைப் பாரடா !
அபிமான முடனே வந்துத்தாய்ச்சபை
அணுகி நலன்கள் கொள்ளடா ! (அழை)
உலகக் கல்வி ஒரு கண்ணாகும்
உயர்த்தும் மார்க்கக் கல்வியோ மறுகண்
பலபல இன்னல்கள் பட்டுமே லீக்கு
பலபல அமைப்பை செய்ததைக் காண (அழை)
கல்விக்கு கண்ணைத் திறந்தது இஸ்லாம்
கடைபிடித் தொழுகும் முஸ்லிம் லீக்கே !
கல்விக் குதவி, கற்றவர் மேதை
கண்டெடுக் கின்ற காட்சியைப் பார்க்க (அழை)
பெண்ணுக் குதவிப் பேசிடும் சங்கம்
ஏழைப் பெண்கள் திருமண முடிக்க
முஹல்லா ஜமாஅத்தை உருவாக்கித் தொண்டு
மும்முர மாகவே செய்யுமே லீக்கு ! (அழை)
முன்மாதிரியாய் முஹல்லா ஜமாஅத்
உழைத்தே உயர்வைக் காட்டிடு வோர்க்கே
"கண்ணியம்"-"விருதுகள்" கண்டு கொடுப்பதைக்
கண்டு களித்திடத் தாய்ச்சபை வாரீர் ! (அழை)
மலராய் மலர்ந்தே மாந்தியுண் தேனாய்
வார்த்தைகள் பேசிய வள்ளல் முஹம்மதின்
குலத்தவர் முஸ்லிம் குளிர்புன் முறுவல்
மலர்த்தும் நாங்களா "பயங்கர வாதிகள் !" (அழை)
மனிதன் மனிதனை வதைத்துக் கண்ணீர்
வடியச் செய்யும் மனிதாப மற்ற
புனிதமில் செயலைப் புறம்தள்ளி இஸ்லாம் !
மதநல்லிணக்கத்தை வளர்த்துக் காப்பது (அழை)
இளம்பிறை எழுச்சிப் பேரணி காண்பதும்
இளம்பிறை பச்சைக் கொடியது பறப்பதும்
வளம்பெற பாரதம் வாழ்த்துக்கள் கூறவே !
களம்கண்டு இந்தியா வெல்வதைக் கூறிட (அழை)
மதச்சார் பற்ற ஜனநாய சக்திகள்
மாண்புற வென்றிட, மதவெறி செத்திட
இதமாய் முழங்குவோம் சங்க நாதமே !
விழிப்புணர் வூட்டுவோம் ! அரசியல் வளம்பெற (அழை)
இறைவழி பாட்டில் வேற்றுமைக் களைவோம் !
இஸ்லாத்தில் இணக்க விதைகளை விதைப்போம் !
இயக்கங்கள் அனைத்திலும் ஒழுங்கினை அமைப்போம் !
இயங்குவோம் புதியசகாப்தம் திரள்வீர் ! (அழை)
தேசிய ஒருமைப் பாட்டுக்கே உழைப்போம் !
தேர்ந்த சமயநல் லிணக்கம் காண்போம் !
சிறுபான் மையினர் தன்மையைக் காப்போம் !
தாய்ச்சபை அழைக்கும் சங்கதி சொல்லிட (அழை)
கவிஞர் மு. முஹம்மது தாஹா
குறிப்பு : இந்த கவிதை மணிச்சுடர் இதழில் கடந்த வாரம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகா ! என்னதொரு அற்புதமானக் கவிதை. படிக்கும்போதே இதயம் இனிக்கிறது. துள்ளி ஓடும் நடையில் லீக்கின் கருத்துக்கள் பலப்பலப்பாய் மின்னுகிறது.
ReplyDeleteஇப்படிப்பட்டோர்கள் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்க !
நல்லக் கருத்துக்கள் உள்ளப் பாடல்.
ReplyDeleteசொல்ல வேண்டியவைகளை சொல்லும் பாடல்.
எல்லோரும் படிக்க வேண்டிய பாடல்.
அதிரை அருட் கவியின் அற்புத வரிகள்..நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கும் வாய்ப்பு.. ஆனால் அதே கம்பீர் வரிகளுடன்..
ReplyDeleteகவிஞர் மு. தாஹா அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுலையும், ஆரோக்கியமான வாழ்வையும் வழங்கிட துஆ செய்கிறேன்.
அருமையான புதுமை கவிதை மிக அருமை.
ReplyDeleteஎழுர்ச்சி மிகு வரிகள். வாழிய பல்லாண்டு முதறிஞர் தாஹா அவர்கள்
ReplyDeleteகவிஞர் தாஹா அவர்களின் உணர்ச்சிபொங்கும் கவிவரிகள் என்னை சுண்டியிழுத்து விட்டன.அருமை.
ReplyDeleteAjmeer agencies kudumpam sarpaka valththukenrean .
ReplyDeletekavegkar valka avaraippol pala kaveggar adiraikku varaveandum
நல்லக் கருத்துக்கள் உள்ளப் பாடல்.
ReplyDeleteசொல்ல வேண்டியவைகளை சொல்லும் பாடல்.
எல்லோரும் படிக்க வேண்டிய பாடல்.
namathu vuril iuml how many members?
ReplyDelete