அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்ட மவ்லவீ முர்ஷீத் அப்பாஸி அவர்கள் 'ஏகத்துவம்' என்ற தலைப்பிலும், மவ்லவீ சித்தீக் இஸ்லாமி அவர்கள் 'இளைஞர்களே உங்களைத்தான் !' என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
முன்னதாக அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் செய்துருந்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.