.

Pages

Wednesday, December 18, 2013

மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர் !

அதிரை ஏரிப்புறக்கரை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் இன்று காலை நடந்து. இதில் டிஆர்ஓ சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஏரிப்புறக்கரை கிராம வருவாய் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.
இதில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை திட்டம், இந்திரா காந்தி விதவை உதவித்தொகை திட்டம், இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டம் மற்றும் தொடர்புடைய மற்ற நலத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பயன்பெறுவது குறித்து எடுத்துக்கூறப்பட்டது.

இன்றைய மக்கள் நேர்காணல் முகாமில் பட்டா மாறுதல், சான்றுகள், உதவித்தொகை,  மற்றும் குடும்ப அட்டை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மேலும் அதிரை பொதுநலன் சார்ந்த மனுக்களை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், பட்டுக்கோட்டை வட்டார இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை மைதீன், ஆதம் நகர் கவுன்சிலரும், எஸ்டிபிஐ கட்சியின் முன்னோடி நூர்ஜஹான், 14 வது வார்டு கவுன்சிலர் N.K.S. முகம்மது செரீப் மற்றும் கிராம மீனவர் சங்கத் தலைவர்கள் ஆகியோர் மனுக்களை அளித்தனர்.

முன்னதாக அரசின் நலத்திட்டங்களை விண்ணப்பித்த பயனாளிகளுக்கு டிஆர்ஓ சுரேஷ்குமார் வழங்கினார். எரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்து கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன், மாவட்ட கவுன்சிலர் கண்ணகி கல்யாண சுந்தரம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

ஏரிப்புறக்கரை கிராம வருவாய் எல்லைக்குட்பட்ட எரிபுறக்கரை கிராமத்தினர்கள், பிலால் நகர்-ஆதம் நகர்-மேலத்தெரு-கீழத்தெரு-நடுத்தெரு கீழ்புறம்-புதுத்தெரு-கடற்கரைதெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.








1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.