.

Pages

Monday, December 9, 2013

கடற்கரைத்தெருவிற்கு நேரடி பைப் லைன் அமைப்பது குறித்து அதிரை பேரூராட்சி தலைவரின் விளக்கம் ! [ காணொளி ]

கடந்த சில மாதங்களாகவே போதுமான குடிநீரை விநியோகிக்கவில்லை எனக்கூறி கடற்கரைத்தெரு பகுதியினர் அவ்வப்போது அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைப்பது வாடிக்கை. பொறுமையாக இருந்த வந்த இவர்கள் உச்சகட்டமாக கடந்த [ 02-12-2013 ] அன்று, 8, 9, 10 ஆகிய வார்டுகளில் வசிக்கும் மக்கள் திரண்டு வந்து பேரூராட்சி எதிரே உள்ள ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இவர்களின் நியாமான கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்ட பேரூராட்சி நிர்வாகத்தினர், இந்த பணிகளுக்காக ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8" போர்வெல் அமைக்கும் பணியை துவக்கினர். அங்கிருந்து நேரடி பைப் லைன் மூலம் 3 ஆயிரம் மீட்டர் தூரத்தில் கடற்கரைத்தெரு பகுதிக்கு குடிநீரை கொண்டுவந்து விநியோகிப்பது என முடிவு செய்து அதற்குரிய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்காக ஜேசிபி எந்திரம் மூலம் ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நிறைவு பெற உள்ள இந்த பணிகளுக்காக ஊழியர்கள் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.



குடிநீர் பற்றாக்குறை பகுதியான கடற்கரைத்தெருவிற்கு நேரடி பைப் லைன் அமைப்பது குறித்து அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் விளக்கம் !

7 comments:

  1. அதிரை நலனுக்கெதிரான இயக்க நலவாதிகளின் சூழ்ச்சி முறியடித்து, உங்களின் அதிரை நல இலக்கு வெல்லட்டும்!

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. அதிரை சேர்மன் மீது குறைகளும் நிறைகளும் கானப்படுகிறது குறைகளினால் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை அவரின் நிறைகளால் மக்களுக்கு பல நன்மை அஸ்லம் வந்த 2 ஆண்டுகளில் பல சிமென்ட சாலைகள் போடப்பட்டுள்ளது, நோய்களை பரப்பும் குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளது தெருக்களுக்கு வாரம் ஒரு முறை வரும் துப்புரவு பணியாளர்கள் தினமும் வருகிறார்கள். எதிர்கட்சியில் உள்ளவர் சேர்மனமாக உள்ள ஊர்களிலேயே அதிராம்பட்டினத்தில் மட்டும் தான் 12 மணி நேரம் மின்வெட்டு இருந்தபோது ஜெனரேட்டரை வைத்து குடி நீர் சப்பிளை செய்யப்பட்டது என்பதை நாம் நினைத்துப்பார்க்கவேண்டும் மக்களுக்கும் ஊருக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற ஆர்வம் அஸ்லமிடம் உள்ளது இருந்தாலும் அவரின் நலனில் அக்கரையுள்ளவர்கள் செல்லும் கருத்துக்களையும் அவர் கேட்டு தன்னிடம் கூறப்படும் குறைகளை அவர் நிவர்த்தி செய்யவேண்டும்

    ReplyDelete
  4. சகோ .அஸ்ரப் அவர்களுக்கு .........சேர்மன் அஸ்லாம் அவர்களிடம் குறைகளில் மிகுதம் காணப்படுவது பிறரால் அவரை பழிவாங்கும் நோக்கமே .நிச்சயமாக அஸ்லாமின் செயல்பாடுகள் அனைத்தும் தொலை நோக்கு பார்வை உடையதே.அதிரை வரலாற்றில் புரட்சிகர திட்டங்கள் பல தடைகளை மீறி ஜாதி, மத, தெரு பாகுபாடின்றி நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்க அம்சம்....

    ReplyDelete
  5. திறம்பட செய்த முயற்சி, நல்ல தண்ணீரில் சாக்கடை கலக்காமல் பாதுகாத்துக்கொள்ளனும்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அழைக்கும்
    அல்லாஹு சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன்
    தங்களின் சேவை மனபான்மையை எண்ணி மிக மன மகிழ்வடைகிறோம்
    போற்றுவோர் போற்றட்டும்,
    தூற்றுவோர் தூற்றட்டும்,
    தொடருட்டும் உங்கள் சமூகப்பணி ஏக இறைவன்னுக்காக.
    ஊரே ஓன்று சேர்த்து உங்களுக்கெதிராக சதி செய்ய நினைத்தாலும் அல்லாஹ் நாடினாலன்றி உங்களை ஒரு கொன்பனாலும் ஒன்றும் செய்ய இயலாது ஏனென்றால் அவனே சதிகாரனெக்கெல்லாம் சதிகாரனாக இருக்கின்றான் இறைமரையாம் தனது திருமறையில் கூறியதுபோல் ஒவ்வருவரும் மற்றவருக்கு பொறுப்புதாரி அந்த வகையிலே தலைவன் தன்னை நம்பி வாழும் மக்களுக்கு போருப்புதாரியக்கப்பட்டுல்லான் அந்தகைய பொறுப்புகளை செய்யத்தவரும்பட்சத்தில் கண்டிப்பாக அவன் இறைவனிடத்தில் ஒரு குற்றவாளியகவே காணப்படுவான் வல்ல அல்லாஹ் என்னையும்,உங்களையும் பாதுகாத்து அனைவரும் விடந்தாவாதத்தில் ஈடுபடாமல் ஒற்றுமையுடன் வாழ்ந்து மரணிக்க வழிச் செய்வானாக ஆமீன்

    அன்புள்ள அனைத்து கழகவாதிகளே நமது சேர்மனுக்கேதிராக வீணான அவதூறு பரப்புவதையும், விடந்தாவாதம் செய்வதையும் கைவிட்டுவிட்டு அவருடன் ஓன்று சேர்ந்து உங்களுடைய சேவைகளையும் இறைவன் துணைக்கொண்டு இனிதே செய்திட பணிவாய் கேட்டுக்கொள்கிறன்

    ReplyDelete
  7. தங்களின் சேவை மனபான்மையை எண்ணி மிக மன மகிழ்வடைகிறோம்
    போற்றுவோர் போற்றட்டும்,
    தூற்றுவோர் தூற்றட்டும்,
    தொடருட்டும் உங்கள் சமூகப்பணி ஏக இறைவன்னுக்காக.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.