.

Pages

Monday, December 23, 2013

செடியன் மற்றும் மரைக்கா குளங்களில் தண்ணீர் திறந்து விடக்கோரி மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு !

நமதூரின் அனைத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வந்த அதிரை செடியன் குளம் மற்றும் நமதூர் பெண்கள் பயன்படுத்தி வந்த மரைக்கா குளம் ஆகியவற்றில் நீரின்றி வறண்டு காணப்படும் நிலையை கருத்தில் கொண்டு அதிரை பெரிய ஜும்மா பள்ளி, தாஜுல் இஸ்லாம் சங்கம், கீழத்தெரு சங்கம், பிலால் நகர் ஜமாத் ஆகியவற்றின் சார்பாக கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்குவதற்காக இன்று காலை 8.30 மணியளவில் தஞ்சை புறப்பட்டு சென்றனர்.

இதில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகிகள் மான் A. நெய்னா முஹம்மது, தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் ஜஃபருல்லா, கீழத்தெரு சங்க நிர்வாகிகள் நாட்டமை S.S. சேக்தாவூது, M.M. சேக்தாவூது, தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள் B. ஜமாலுதீன், சம்சுல் மன்சூர், பிலால் நகர் ஜமாத் நிர்வாகி S. முஹம்மது மொய்தீன் ஆகியோரைக் கொண்ட குழுவினர்கள் இடம்பெற்றிருந்தனர்.

தஞ்சை சென்றடைந்த இவர்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவர்கள் இவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்வதாக கனிவுடன் கூறியிருக்கிறார்.


கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...

வறண்டு காணப்படும் குளங்கள் :





17 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

    ReplyDelete
  3. உங்களுடைய முயற்சி வெற்றி பெற. இறைவனை பிராத்திப்போம்.

    ReplyDelete
  4. சமுக ஆர்வலர்ஹல் தனது ஏரியாவிற்கு தண்ணீர் வந்ததுடன் நிறுத்தி கொள்ளாமல் மற்ற ஏரியாவிற்கும் முயற்சி செய்யவும்

    ReplyDelete
  5. வெற்றிக்கு அல்லாஹ் துணை புரிய அனைவரும் துஆ செய்யுவோம் ..ஆமீன் .CMP வாய்கால் தண்ணீர் விவகாரத்தில் ஐக்கிய ஜமாஅத் இல்லையே என்ற நெருடல் எனது மனதில் தோன்றியது... இதை இப்படியும் எடுத்துகொள்வோம் ஊரும் பெரிதாகி விட்டது .நல்லவிசயங்களில் பிரிவினை இல்லா போட்டிகள் தவிர்க்க முடியாத மற்றும் அவசியமான ஒன்றே.

    ReplyDelete
  6. உங்களுடைய முயற்சி வெற்றி பெற. இறைவனை பிராத்திப்போம்,அடுத்து வெட்டி கொளத்துக்கு யாரு போறது?

    ReplyDelete
  7. நிச்சயமாக இந்தக் குளங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.. மருந்துக் குளம் என்று பெயர் பெற்ற செடியன் குளம் இவ்வாறு காட்சியளிப்பது மனதுக்கு ஏதோ செய்கிறது.

    ஒருகாலத்தில் துள்ளிக்குதித்து குளித்தகுளம் இது. இன்ஷா அல்லாஹ் நம்தூரில் அனைத்துக் குளங்களும் செழிப்படையும். இதில் அனைவரும் முயல வேண்டும்..

    ReplyDelete
  8. இந்த புகைபடத்தை பார்பதற்கே மிக சந்தோசமாக இருக்கு ஏன் என்றால் இது எல்லோரும் ஊர் நலன்காக சேர்ந்து செய்யக்கூடிய வேலை இது போன்று எல்லா விசயதுக்கும் ஓன்று பட்டாள் நாம் நினைத்ததை நிரைவேற்றி கொள்ளலாம்.குளத்து நீர் விரவில் வர என் துவாவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    நிச்சயமாக முயற்சி திருவினையாக்கும்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  10. செடியங்குளம் மறக்கமுடியாத ஒன்று. அனைவரும் இக்குளத்தில் குளித்து மகிழ்ந்திருப்பார்கள். அதிரையர்களின் பிரியமான குளம். இக்குளத்திற்கு மிக முக்கியமாக விரைவில் தண்ணீரைக் கொண்டு வந்தால் அனைவரும் சந்தோசத்தில் நீச்சளடிப்பார்கள் என்பது உண்மை.

    ReplyDelete
  11. சகோதரர் ஜாஃபர் ஹாசன் கருத்துதான் என் கருத்து.

    //நிச்சயமாக இந்தக் குளங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.. மருந்துக் குளம் என்று பெயர் பெற்ற செடியன் குளம் இவ்வாறு காட்சியளிப்பது மனதுக்கு ஏதோ செய்கிறது.

    ஒருகாலத்தில் துள்ளிக்குதித்து குளித்தகுளம் இது. இன்ஷா அல்லாஹ் நம்தூரில் அனைத்துக் குளங்களும் செழிப்படையும். இதில் அனைவரும் முயல வேண்டும்

    ReplyDelete
  12. உங்களுடைய முயற்சி வெற்றி பெற. இறைவனை பிராத்திப்போம்.
    செடியன் குளம் இவ்வாறு காட்சியாளிப்பதை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப கஸ்டமாக உள்ளது இந்த புகைடத்தை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப கஸ்டமாக உள்ளது.

    வறண்ட பாளைவனம் போல் காட்சி தரும் செடியங்குத்தை பார்த்தாள். பெயர் பெற்ற செடியன் குளமா? இது என்று என்ன தோன்றுகிறது இப்படியெரு நிலை செடியங்குளத்துக்கு வருமென்று நினைத்து கூட பார்க்க வில்லை. எல்லாவற்றை விட முதலில் பெண்கள் குளத்திற்க்கு தண்ணீர் கொண்டு வருவது மிக முக்கியமான ஒன்று ஏன் என்றால் பெண்கள் குளத்தில் தண்ணீர் இல்லாமல் போனதாள் நமதூர் பெண்கள் மிக சிறமத்திர்க்குள்ளாகி வருகிறனர். இந்த குளங்கள் இந்த நிலைக்கு போவதற்க்கு காரணம் நம்மலோட அலச்சிய போக்கே காரணம் என்று நான் சொல்வேன் அதிலும் குறிப்பாக நமதூர் இளைஞர்களை தான் குறை சொல்ல வேண்டும் நாங்கள் ஊரில் இருக்கும் போதெல்லாம் எப்படியாவது கஸ்டப்பட்டு தண்ணீர் கொண்டு வந்து சேர்த்து விடுவோம்.ஆனால் இப்போதுயுள்ள இளைஞர்கள் யாரும் இதை பற்றி கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. இப்போது உள்ள இளைஞர்கள்க்கு இதற்கெல்லாம் நேரம் கிடைப்பது இல்லை இப்போ உள்ள இளைஞர்களக்கு பொது நலம்மென்பது சொல்லி கொடுத்தாலும் வருவது கிடையாது அப்படியே வந்தால் அது அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கங்கள் வாயிலாவே வருகிறது.அப்படி வந்தாள் அதுக்கு பெயர் பொது நலம் கிடையாது.

    ஊர் நலன்காக எல்லோரும் ஒன்று பட்டாள் நாம் நினைத்ததை நிரைவேற்றி விட முடியும் உங்களுடைய முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை நாம் அனைவரும் பிராத்திப்போம். நாம் அனைவரும் இதற்க்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.

    ஒன்று பட்டாள் உண்டு வாழ்வு

    என்றும் அன்புடன் அதிரை M. அலமாஸ்

    ReplyDelete
  13. செடியன் குளத்தில் தண்ணீர் வர வேண்டும்; விடுப்பில் வந்து குளித்துப் பழைய கால நினைவலைகளில் நீந்த வேண்டும் என்ற அவாவுடன் இருக்கும் ஆயிரமாயிரம் உள்ளங்களுடன் அடியேனும் இணைகின்றேன்.

    வாழ்க ஒற்றுமை
    வளர்க கடின உழைப்பும் விடா முயற்சியும்.

    ReplyDelete
  14. ஊர் தலைவர்களும் சமுக ஆர்வலர்ஹல் தனது ஏரியாவிற்கு தண்ணீர் வந்ததுடன் நிறுத்தி கொள்ளாமல் மற்ற ஏரியாவிற்கும் முயற்சி செய்யவும்

    ReplyDelete
  15. ஊர் தலைவர்ன்னு சொல்லிக்கிறவங்க ஊர் முக்கியஸ்தர்ரெல்லாம் கூட்டிட்டு கலெக்டர பாக்க போனப்ப எந்தந்த குளத்துக்கெல்லாம் தண்ணீ வேணும்னு கேட்டாங்கங்கறத முதல்ல சொல்லச்சொல்லுங்க, ஏனா மத்த குலத்துக்கலாம் அவங்க முயற்சி பண்ற மாதிரி தெரியல. அதனால அந்தந்த ஜமாத் முயற்சி பண்றது நல்லது. எதுக்கும் அவங்ககிட்ட கேட்டுக்கோங்க அப்புறம் அவங்க இடையூறு பண்றாங்க இவங்க இடையூறு பண்றாங்கன்னு சொல்லி ஒரு பேட்டி கொடுப்பாங்க.. பாவம் வெளம்பரத்த விரும்புரவங்களாச்சே..

    சரி.. சரி.. விடுங்க..

    அப்புறம்.. இன்னொரு விஷயம்.. சி.எம்.பி வாய்க்கால் தண்ணீ காவிரி பிரச்சன மாதிரி போய்டாம்ம அமைதியா பேசி தீர்த்துக்கடனும். அபுபக்கர் காக்கா சொல்ற மாதிரி ஐக்கிய ஜமாத்துதான் இத செய்யணும், அதான் சேர்மன் ஒத்துவரமாட்டாராமே, அப்புறம் ஏன் அத பத்தி பேச. சரி.. விட்டுடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. Thiru Makkal Kural, pls publish ur name...i hope ur parent given good name for u...dont make unnecessary comment...

      Delete
  16. our people was not allowed to file the request as it already been sanctioned.

    There must be a receipt like this http://3.bp.blogspot.com/-TVsl3-XjB1M/UrBw2F7-3KI/AAAAAAAAAMY/NXmdOb0F1Yo/s1600/SHAREEF-1.jpg

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.