.

Pages

Saturday, December 21, 2013

தண்ணீர் ! தண்ணீர் !! தண்ணீர் !!!

வந்ததை வரவேற்றதுமில்லை
வருவதை தடுத்ததுமில்லை
அது வரும்போது வரும்

வெந்தை தின்றுவிட்டு
வந்ததை அருந்துவோம்
வயிறு நிறைந்த கையோடு
மடையை திருப்புவோம்

எங்கள் குளங்களும்
நிறையும்
எங்கள் குலங்களும்
நிறையும்

மடை திருப்ப
படை திரட்டியதுமில்லை
எங்களுக்குள் போட்டியே
எந்தக்குளத்தை
முதலில் நிரப்புவது
என்றுதான்

எங்கள் செயலை
வெளிச்சம் போட்டு
காட்ட நாடியதுமில்லை
எதையும் தேடியதுமில்லை

எங்களுக்கு ட்டார்ச் வெளிச்சம்
மட்டும் தேவைப்பட்டது
மடை திருப்ப

மு.செ.மு. சபீர் அஹமது  

8 comments:

  1. நீருக்கு நடுநிலையான அழகிய வரவேற்பு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. \\மடை திருப்ப
    படை திரட்டியதுமில்லை
    எங்களுக்குள் போட்டியே
    எந்தக்குளத்தை
    முதலில் நிரப்புவது
    என்றுதான்//

    கடைக்கண் திறவாதோ
    மடைத்தான் திறக்காதோ
    தடைத்தான் மறையாதோ
    படைத்தான் விலகாதோ

    ஏக்கம் ஏக்கம்
    ஏனிந்தப் போக்கும்
    மன்னிப்போம்; மறப்போம்
    தண்ணீர்க்கு வ்ழிகளைத் திறப்போம்.

    ReplyDelete
  3. அருமை ..அருமை..தக்க சமயத்தில் பொருத்தமான கவிமொழியில் உங்கள் கவிதை ...!

    ReplyDelete
  4. 3௦ வருடங்களுக்கு முன்னாள் cmp வாய்க்காலில் சரியான காலத்திற்குள் தண்ணீர் வந்துவிடும் அள்ளிக்குடிக்கும் கண்ணாடி போன்ற தண்ணீர் சாக்கடை கலப்பு இல்லை,தண்ணீருக்காக கலக்டரை அணுகவேண்டியது இல்லை இன்றைய களேபரங்களை பார்த்தபோது இப்படி தோன்றியது [என் கிறுக்கல்]

    நாங்கள் செக்கடி குள ஆதரவாளர்கள் இரவு 11 மணிக்கு பிறகுதான் குளங்களுக்கு தண்ணீர் திருப்புவோம் காரணம் பகல் பொழுதில் விவசாயிகளுக்கு விட்டுக்கொடுப்போம்

    கூடுதல் தகவல் அன்று மடை திருப்ப எங்கள் அணியில் அஸ்லம் என்றொரு நண்பரும்[நண்பரும்] கூட வருவார் இன்று சேர்மன் அஸ்லம் என்கிறோம்

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    அருமையான கவிதை,
    தலைப்பை பார்த்தவுடன் கே.பாலச்சந்தர் அவர்களின் தண்ணீர் தண்ணீர் திரைப்பட நினைவு வந்தது.

    இன்று அதிகாலை முதல் (22/12/2013) சி.எம்.பி.வாய்க்காலில் தண்ணீர் வரத் தொடங்கியது.

    இது வரைக்கும் கிடைத்த வெற்றிகளிலே இது ஒரு மாபெரும் வெற்றி.

    இந்த வாய்க்காலில் கடைசியாக முழுமையாக தண்ணீர் வந்த ஆண்டு1995.

    இந்த வாய்க்கால் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் முழுமையாக ஆழமாக சரியாக தெளிவாக தூர்வாரப்பட்டுள்ளது.

    இதற்காக பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

    இதோடு நின்று விடாமல் இந்த வாய்க்கால் வரப்புகளை கற்களால் தடுப்பு கட்டி பாதுகாத்தால் நல்லது, இல்லையேல் மறுவருடம் வரைக்கும் இப்படி இருக்குமா?

    சிந்தித்து எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

    நல்லத்துக்கு முயற்சி செய்யும் பொது எல்லாம் வல்ல நாயன் கிருபை நிச்சயமாக கிடைக்கும்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. CMP வாய்க்காலின் முழுவிபரமும் அறிந்தவராகிய KMAJ அவர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளது செயல் வீரர்கள் கவனிக்கவும்

      Delete
  6. Best poem keep it up Shabeer kaka

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.