13.12.2013 வெள்ளியன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை அமீரகம் வாழ் அதிரையர்களுக்காக சிறப்பு தர்பியா பயிலரங்கம் துபை, தெய்ரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள 'தவ்ஹீத் இல்லத்தில்' ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், அமீரகத்திற்கு குறுகிய கால வருகை புரிந்துள்ள JAQH மாநிலத் துணைத் தலைவரும் இஸ்லாமிய அழைப்பாளருமாகிய சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'அன்றாட வாழ்வில் ஆயிரமாயிரம் நன்மைகள்' என்ற பொருளில் ஈடிணையற்ற அருளாளன் அல்லாஹூத்தஆலா அடியார்களாகிய நம்மீது கருணை கொண்டு வாரி வழங்கும் நன்மைகளை பட்டியலிட்டு ஏடுகளிலும் உள்ளத்திலும் பதிவேற்றிக் கொள்ளச் செய்தார்கள்.
http://www.youtube.com/watch? v=JM6i-YeTsDU
இதன் தொடர்ச்சி, இன்ஷா அல்லாஹ் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் மீண்டும் அமீரகம் வரும் போது தொடரும். இத்தர்பியாவின் பயனை நீங்களும் பெற்றிட நம்முடைய வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காணோளியை பாருங்கள், அடுத்தவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.
13.12.2013 வெள்ளியன்று இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா ஐகாட் சிட்டி 1ல் அமைந்துள்ள ஓர் தனியார் கார்கோ கம்பெனி பின்புறம் அமைந்துள்ள பள்ளிவாசலில் இரவு 8 மணிமுதல் 9.30 மணிவரை 'உள்ளத்தை வெல்வோம்' என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
சொற்பொழிவுக்குப் பின் பிற மத சகோதரர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்கள் கூறப்பட்டன.
செய்தி தொகுப்பு : அதிரை அமீன்
Source : http://www.aimuaeadirai.blogspot.ae/2013/12/jaqh.html
Video Special Thanks to : ADIRAI NIRUBAR MEDIA















அன்புச்சகோதரர்களே,
ReplyDeleteஅதிரை நியூஸ் தளத்தில் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் வாசகர்கள் பதியும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்பட்டு வருகின்றதை நாம் அறிந்த ஒன்று. இந்த வாய்ப்பை பயன்படுத்தும் சில சகோதரர்கள் பிறர் மனம் நோகும்படியான சில கருத்துகளை பதிந்து விடுகின்றனர். இதனால் வலைதள நடத்துனர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
இந்த பதிவில் பதிவுக்கு தொடர்பில்லாத வகையில் தனி நபர் தாக்குதலோ அல்லது வசை மொழிகளோ கொண்ட பின்னூட்டங்கள் இடம்பெறுமானால் அவை முன்னறிவிப்பின்றி நீக்கம் செய்யப்படும் என்பதை அன்புடன் அறிவுறுத்துகின்றோம்.