.

Pages

Friday, December 13, 2013

மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள எளிய முறை மின்கட்டணம் செலுத்தும் வசதி !


தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சவுந்தர்ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுடைய மாதாந்திரகட்டணத்தை வெளியூர், வெளிநாடு செல்லும் காரணத்தினாலோ அல்லது வீடு பூட்டப்பட்டு இருந்தாலோ மின்வாரிய ஊழியரால் பதிவு செய்யப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, மின் நுகர்வோர் முன்பணமாக தாங்களே முன்வந்து செலுத்தும் பட்சத்தில் தங்களுடைய தொகைக்கு வாரியம் 9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்கவும்.

மின் நுகர்வோர்கள் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலத்தில் தங்களுடைய மின் இணைப்பு எண் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மின் வாரியம் குறுஞ்செய்தி மூலம் தங்களுடைய மாதாந்திர கட்டணம் மற்றும் தொகை கட்டுவதற்கான கடைசி தேதி ஆகியவற்றை மதிப்பு கூட்டு சேவையாக செய்து வருகிறது.

வங்கிகளில் செலுத்தலாம்

மின் கட்டணம் செலுத்த இனி காலம், பணம், எரிபொருள் போன்றவற்றை வீணாக்காமல் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் மின் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே வங்கிகள் மூலம் தங்கள் மின் கட்டண தொகையை செலுத்தலாம்.

மேலும் www.tneb.in என்ற இணைய தளத்தின் மூலம் வீட்டில் இருந்தபடியே மின் கட்டணத்தை செலுத்தலாம். எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி, தங்களுடைய கூடுதல் காப்பு தொகையினை உடனே செலுத்தி வாரியத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி : தினத்தந்தி

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.