இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சை மண்டல மேலாளர் ராஜேந்திரன் கிளையை திறந்து வைத்தார்.
வங்கியின் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்து பேசும் போது,
மத்திய மாநில அரசு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியன இணைந்து கடந்த 1977 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 127 கிளைகள் உள்ளன. தற்போது 128 கிளையை அதிரையில் துவங்கியுள்ளது. வங்கியின் முதன்மையான நோக்கம் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், சிறுதொழில்கள், குறுந்தொழில் செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடனுதவி, கல்விக்கடன், வாகனக்கடன் ஆகிய உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தேசிய வங்கிகளுக்கு இணையாக அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் எளிமையான முறையில் வெளிநாடுகளில் இருந்து நேரிடையாக பணம் பெற்றுக்கொள்ளும் WESTERN UNION MONEY TRANSFER வசதி, இஸ்லாமிய பெண்கள் அமர்வதற்கு பிரத்தியேக தனியறை ஆகியன இந்த கிளையில் அமைந்துள்ளது என்றார். மேலும் விரைவில் ATM வசதியும் செயல்பட உள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.
துவக்க விழாவில் அதிரை நகரின் முக்கியஸ்தர்கள், வங்கியின் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.