கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பக்க வாதத்தால் பாதிப்படைந்து, வீட்டில் படுத்த படுக்கையாய் காட்சியளிக்கிறார் என்ற தகவல் அவரின் மனைவி மூலம் நமக்கு கிடைத்தவுடன் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தோம்.
இதுகுறித்து ஹாஜா அவர்களின் மனைவி நம்மிடம் கூறுகையில்...
'கடந்த 6 மாதத்திற்கு முன்பு பக்க வாதத்தால் பாதிப்படைந்த எனது கணவருக்கு ஒரு கை, ஒரு கால் விளங்கவில்லை, பேச்சும் தெளிவாக இல்லை. படுத்த படுக்கையாக கிடக்கிறார். உணவு உட்கொள்ளுவதிலும் பெறும் சிக்கலாக இருக்கிறது. சிறுநீரும் படுக்கையிலேயே கழிகின்றன.
எனது கணவர் ஆரோக்கியமாக இருக்கும் போது கடைத்தெரு மீன் மாக்கெட்டில் தினமும் மீன் வியாபாரம் செய்வார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் எங்களின் பொழுது போனது. இவர் உடல்நிலை பாதிப்படைந்ததை தொடர்ந்து எந்தவொரு வருமானமும் எங்களுக்கு இல்லாமல் ஆகிவிட்டது. தற்போது நான் தினமும் பக்கத்து தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று வேலை செய்து வருகிறேன். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பள்ளிக்கூடங்கள் செல்லும் எனது இரு குழந்தைகளின் பராமரிப்பிற்கும், பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கும் மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொடுப்பற்கு போதுமானதாக இல்லை. வீட்டு வேலை செய்துவிட்டு வீடு திரும்பியவுடன் எனது கணவருக்கு வேண்டிய பணிவிடைகளும், எனது குழந்தைகளுக்கு வேண்டிய உணவுகளும் தயார் செய்துகொண்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையோடு வாழ்ந்து வருகிறோம்.
இதனாலேயே எனது கணவரின் மேற் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை. அவரின் உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றன. ஆகையால் அன்புள்ளோம் கொண்ட அருமை சகோதர்களே எங்கள் குடும்பம் படும் துயரில் நீங்களும் பங்கெடுத்துகொண்டு எங்களுக்கு உதவ வேண்டும்' என்று வேதனையுடன் முடித்துக்கொண்டார்.
அங்கிருந்து விடைபெறும் போது பாதிக்கப்பட்ட ஹாஜா அவர்கள் 'அழுதுகொண்டே... சாப்பிடக்கூட எங்களிடம் காசில்லை' என்று சைகையில் கூறியது எங்களின் மனதை நெகிழ வைத்துவிட்டது.
நிதி உதவி கோரி பாதிப்படைந்த குடும்பத்தினர் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம் :
A/c Name : A.THAJUDEEN
Bank Name : CANARA BANK
Branch :ADIRAMPATTINAM
A/c No. 1201101040484
தொடர்புக்கு : 0091 9842411587
குறிப்பு : இவரின் குடும்பத்திற்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள ஹாஜா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
வெளிநாடு வாழ் அதிரையர்கள், மஹல்லா நிர்வாகத்தினர், சமுதாய அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இக்குடும்பம் படும் துயரில் பங்கெடுத்து உதவ முயற்சிக்கலாம்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வெளிநாடு வாழ் அதிரையர்கள், மஹல்லா நிர்வாகத்தினர், சமுதாய அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இக்குடும்பம் படும் துயரில் பங்கெடுத்து உதவ முயற்சிக்கலாம்.
௦
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
சகோதரர் ஹாஜா அவர்களின் மருத்துவ உதவிக்காக மனிதாபிமான அடிப்படையில் அதிரை நியூஸ் குழுவினரின் சார்பாக ரூபாய் 2,000/- வழங்கப்படுகிறது.
ReplyDeleteகூடிய விரைவில் பூரண நலம் பெற அனைவரும் அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்வோமாக.!
Nalla sukam kedaikka anaivarumthuva seaivomaha.
ReplyDeleteசுறுசுறுப்பாக மார்க்கட்டில் இயங்கக்கூடியவர் இவருக்கு இந்த நிலையா என்று பார்க்கும் பொழுது யாருக்கும் எப்பவும் இப்படி வாரலாம் என்று நெஞ்சம் பதைபதைக்கிறது தர்மம் தலை காக்கும் என்பார்கள் நமது கெட்ட நசீபையும் துஆக்களால் சரிசெய்ய முடியும் என்பதால் அவர்களுக்கு உதவி அவர்களின் துஆக்களால் நம்மை பாதுகாத்துக்கொள்வோம்
ReplyDeleteவெளிநாடு வாழ் அதிரையர்கள், மஹல்லா நிர்வாகத்தினர், சமுதாய அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இக்குடும்பம் படும் துயரில் பங்கெடுத்து உதவுமாறும், துஆக்களால் சரிசெய்ய முடியும் என்பதால் அவர்களுக்கு உதவி அவர்களின் துஆக்களால் நம்மை பாதுகாத்துக்கொள்வோம்
ReplyDeleteவிரைவில் பூரண நலம் பெற அனைவரும் அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்வோமாக.!
ReplyDeleteReply