.

Pages

Tuesday, December 31, 2013

ரேசன் கார்டு மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்பு ! மாவட்ட ஆட்சியர் தகவல் !!

தஞ்சை மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள உள்தாள்களின் 2013–ம் ஆண்டிற்கான கலங்களுடன் மறுபக்கத்தில் 2014–ம் ஆண்டிற்கு பயன்படுத்தும் வகையில் உள்தாள் அச்சடிக்கப்பட்டு உள்ளது. இந்த குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1–1–2014–ந்தேதி முதல் 31–12–2014 வரை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது. எனவே குடும்ப அட்டைகளில் ஏற்கனவே 2014–ம் ஆண்டிற்கு பயன்படுத்தும் வகையில் உள்தாள் இணைக்கப்பட்டுள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையை பயன்படுத்தி 1–1–2014 முதல் 31–12–2014 வரை தொடர்ந்து ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினத்தந்தி

3 comments:

  1. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நமதூரில் பெண் பிள்ளைகளுக்கு தனி குடித்தனம் மற்றும் தனியாக வீடுகள் பிரிக்க பட்டும் ரேசன் கார்டுகள் பிரிக்க படாமல் கூட்டாகவே இருக்கின்றன.இதனால் தனி குடும்பங்களுக்கு கிடைக்கபெறும் சலுகைகள் நம்மவர்களுக்கு கிடைக்கபெற வாய்ப்புக்கள் குறைவே .இவர்கள் தனியாக சீதனம் எழுதிய அல்லது பிறரிடம் கிரயம் வாங்கிய வீடுகளுக்கு வீட்டு வரிகளை அவர் அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டு புதிய ரேசன் கார்டுகளை வட்டாச்சியரிடம் விண்ணபித்து பெற்றுக்கொள்ளலாம்.வெளிநாடு ,வெளியூர் மற்றும் அறியாத மக்களுக்கு நமதூரின் தன்னார்வ அமைப்புகள் அந்த வார்டு கவுன்சிலர் களோடு தொடர்புகொண்டு செயலில் களம் இறங்கினால் நலமே .

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.