அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான ஊராட்சி ஒன்றிய கிராம இணைப்பு சாலையை சீரமைத்து தர அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, வர்த்தக சங்கம், பல்வேறு சமுதாய அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் , தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக வலியுறுத்தியும், அவ்வபோது ஆர்பாட்டங்கள் செய்துவந்தாலும், கடந்த [ 01-06-2013 ] அன்று நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மரியாதைக்குரிய N.R. ரெங்கராஜன் MLA அவர்களை அதிரை நியூஸ் சார்பாக அதிரை நலன் சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டி நேரடியாக சந்தித்து வலியுறுத்தினோம். அதில் இந்த கோரிக்கையும் ஒன்று
இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூபாய் 61 லட்சம் மதிப்பீட்டில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளுக்குரிய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்குரிய பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிரை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நிறைவேற்றித் தந்துள்ள மரியாதையைக்குரிய நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA மற்றும் பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன் ஆகியோருக்கு நன்றியையும் - பாராட்டுகளையும் அதிரை நகர மக்கள் - அதிரை நியூஸ் இணையதளம் சார்பாக அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிரை நியூஸ் குழு
சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களுக்கும், பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன் ஆகியோருக்கு நன்றியையும் - பாராட்டுகளையும் அதிரை நகர மக்கள் - அதிரை நியூஸ் இணையதளம் சார்பாக அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ReplyDeleteVaalththukkal
ReplyDeleteஎப்படியாவது ஊருக்கு நல்லது நடந்தால் சரி
ReplyDeleteநடந்தது எல்லாம் நல்லவை
ReplyDeleteசட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களுக்கும், பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன் ஆகியோருக்கு நன்றியையும் - பாராட்டுகளையும் - தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ReplyDeleteஅன்புடன்
TIYA அமீரகம்
வாழ்த்துக்கள்.......இருப்பினும்......
ReplyDeleteஓர் உரிமையைப் பெற இத்தனைப் போராட்டங்களும் அவஸ்த்தைகளும்.
அரசு மட்டும் அதட்டி நம்மிடம் பெரும் மறைமுக வரியும், நேர்முக வரியும்.
என்ன நியாயமோ ?
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
SDPI கட்சி சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்
ReplyDelete