நோக்கம்:
1. தற்பொழுது நமதூர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை எடுத்துக்கொண்டால் பலரும் உலக கல்வியின் மீது தான் ஆர்வமாக உள்ளனர்.
2. மேலும் பல மாணவர்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களை, வரலாறுகளை அறியாதவர்களாக உள்ளனர்.
3. எனவே நமதூர் மாணவர்களிடம் மார்க்க கல்வி மற்றும் மார்க்க சட்ட திட்டங்கள், வரலாறுகளை அறிய ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டியை நடத்த உள்ளோம்.
பரிசுகள்
|
பிரிவு-1
(6 முதல் 8 வகுப்பு வரை)
|
பிரிவு-2
(9 முதல் 11 வகுப்பு வரை)
|
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
|
3000 (மதிப்பிலான பொருள்)
2000 (மதிப்பிலான பொருள்)
1000 (மதிப்பிலான பொருள்)
|
3000 (மதிப்பிலான பொருள்)
2000 (மதிப்பிலான பொருள்)
1000 (மதிப்பிலான பொருள்)
|
விதிமுறைகள்:
1. 100 மதிப்பெண் கொண்ட போட்டியான இது எழுத்துமுறையில் நடைபெறும்.
2. இந்த போட்டிக்கான கேள்வி பதில் கொண்ட புத்தகத்தை அதிரை டிஜிடெக் கம்பியூட்டர்ஸில் பெற்றுக்கொள்ளவும்.
3. இந்த போட்டிக்கு தங்கள் பெயரை பதிவதற்க்கு அதிரை முகைதீன் பள்ளி அருகே உள்ள பூங்காவில் இம்மாதம் 28-30 தேதி காலை 10:00- 12:30, மதியம் 2:00- 3:30 மணி வரை.
புத்தகம் பெறும் இடம்: அதிரை டிஜிடெக் கம்பியூட்டர்ஸ், காதிர் முகைதீன் கல்லூரி எதிரில், அதிராம்பட்டினம்.
போட்டிக்கு முன்பதிவு செய்யும் இடம்: அதிரை முகைதீன் பள்ளி அருகில் உள்ள பூங்காவில்
போட்டி நடைபெறும் இடம்: A.L. மெட்ரிக் பள்ளி, அதிராம்பட்டினம்.
நாள்: 15- 01- 2014
நேரம்: காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை
மேலும் விபரங்களுக்கு:
9597773359, 7200563300, 7200364700, 8122848088
இங்ஙனம்,
இளம் இஸ்லாமியன் கமிட்டி
தகவல் : அதிரை பிறை
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteகடந்த சில தினங்களுக்கு முன்னாள் நமது சக இணையதளத்தில் அதிரை இளைஞர்களின் முயற்சியால் உருவாக்கப்பட சிறிய பூங்கா என்ற பதிவில் என்னுடுடைய்ய கருத்து பதிவில் சில கோரிக்கைகளை முன்வைத்தேன் அதில் இன்ஷா அல்லாஹ் இதை கயவர்கள், போக்கிரிகள் கூடி கூத்தடிக்கும் ஒரு இடமாக ஆக்காமல் ஆக்கப்பூர்வம்மான இஸ்லாமிய சமூக கூடமாக பயன்படுத்தவேண்டுமென்ற கோரிக்கைகிணங்க நல்ல முடிவை எடுத்த இப்பூங்கா பராமரிப்பு இளைஞர்களுக்கு எங்கள் இறைவனே அவர்களுக்கு பேரருள் புரிவாயாக
அன்புச்சகொதரர்களே எனது மற்ற கோரிக்கைகைளை மீண்டும் நினைவூட்டுகிறேன் இவ்வழி பெண்கள் மதர்சாகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும், வாராந்திர பயாங்களுக்கும் செல்லும் பிராதான சாலையாக இருப்பதால் தயவுகூர்ந்து நீங்கள் எழுப்பியுள்ள சுற்றுப்புற வலைபின்னல் அந்தவழிய செல்லும் பெண்கலுக்கு பாதுகாப்பற்ற ஒருவிதமான வெட்கவுணர்வு ஏற்படுவதினாலும், அங்கே குழுமியிருக்கும் ஆண்கள் தவறான நோக்கில் பெண்களை பார்க்கவும் அதனால் செய்தானின் சூழ்ச்சியால் இருவருக்குள் செய்கைமூலகவோ, அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ பல தவறான கருத்துப்பரிமாற்றம் செய்யக்கூடுமென்பதாலும் தவறான வழிகளுக்கு இட்டுச்செல்ல வாய்ப்பு இருப்பதினாலும் தயவு செய்து ஆண்கள் பார்வை பெண்கள் மேல் படாமல் சுற்றுப்புற வலைகளை அகற்றிவிட்டு நல்லுள்ளம் படைத்த மக்களிடம் கணிசமான தொகை வசூல் செய்து சுற்றுப்புற சுவர் எழுப்புமாறு கேட்டுக்கொளிறேன் அல்லது சுற்றுப்புற ஒருநல்ல மறைவான தடுப்பு ஏற்படுத்தவும்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.