.

Pages

Wednesday, November 5, 2014

ஜாவியா நிறைவு நாள் நிகழ்சிக்காக உணவு தயார் செய்வதில் தீவிரம் ! நேரடி ரிப்போர்ட் [ படங்கள் இணைப்பு ]

அதிரை ஜாவியாவில் கடந்த 25-09-2014 அன்று முதல் நடைபெற்று வரும் புகாரி ஷரீப் மஜ்லிஸ் நாளை 06-11-2014 வியாழக்கிழமையோடு நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் உணவு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்ற வருகிறது. இதற்காக 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக மேஸ்திரி முஹம்மது பாருக் தலைமையில் மொத்தம் 11 சமையல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மேஸ்திரி முஹம்மது பாருக் நம்மிடம் கூறியதாவது...
'நான்கு நபர்கள் போதுமான அளவில் உண்ணும் அளவில் மொத்தம் 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 1200 கிலோ அரிசி பயன்படுத்தப்பட இருக்கிறது. மொத்தம் 20 சட்டிகளில் உணவுகள் தயார் செய்யப்பட இருக்கிறது. மதியம் 3 மணி முதல் சமையல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இரவு 10 மணிக்கு மேல் அடுப்பு பற்றவைக்கும் பணி ஆரம்பமாகும். இந்த பணி தொடர்ந்து அதிகாலை 4 மணி வரை நீடிக்கும். உணவு தயாரானதுடன் பேக்கிங் செய்யும் பணிகள் தொடங்கும். இதற்காக ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் ஏராளமான இளைஞர்கள் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

களத்திலிருந்து நூவன்னா









3 comments:

  1. அது சரி பார்வை இடும் இவர் என்ன பொறுப்பில் உள்ளார், பதிவு செய்பவர் சிந்திக்க வேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.