.

Pages

Sunday, April 12, 2015

கர்நாடகா அரசை கண்டித்து முத்துப்பேட்டையில் விவசாயிகள் மறியல் போராட்டம்: 150 பேர் கைது !

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கர்நாடகா அரசு காவேரியின் குறுக்கே அணை கட்டுவதை கண்டித்தும் அதனை தடுக்க கோரியும் நேற்று தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக விவசாயிகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் வழியாக போராட்டம் நடைபெறும் தலைமை தபால் நிலையம் முன்பு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் விவசாய சங்க தலைவர்கள் சிவசாமி, துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்கதலைவர்கள் தனவேந்தன், குமார், ஒன்றிய செயலாளர்கள் யோகநாதன,; வீரமணி, விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய தொழிலாளர்கள் கணகசுந்தரம், குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் அம்சவள்ளி, மாவட்ட குழு குஞ்சம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் ஞானமோகன், மாவட்ட செயற்குழு ஜோதிபாசு, இ.கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன், நகரச் செயலாளர் மார்க்ஸ், மா.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளிமுத்து ஆகியோர் பேசினார்கள். இதில் ஒன்றிய குழு துணைத் தலைவர் தெட்சினா மூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னால் ஊராட்சி மனற் தலைவர் மோகன் உட்பட 150 பேர் கலந்துக் கொண்டனர். அனைவரையும் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.