ரோம்: மத்திய தரைக்கடலில் சிக்கி தவித்த ஆப்ரிக்க நாடுகளை
சேர்ந்த 1500 அகதிகளை இத்தாலி கடற்படையினர் நேற்று ஒரே நாளில் மீட்டு சாதனை
படைத்துள்ளனர்.ஏழ்மையான ஆப்ரிக்க கண்டத்துக்கும், செல்வசெழிப்புமிக்க ஐரோப்பா
கண்டத்துக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது. வடக்கு ஆப்ரிக்க கடலோரம் உள்ள
லிபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் இந்தக்கடல் வழியாக இத்தாலி உள்ளிட்ட
ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். லிபியாவில் தற்போது
நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக இந்நாட்டிலிருந்து இத்தாலிக்கு வரும்
அகதிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பாரம் தாங்க முடியாத பாதுகாப்பற்ற
படகுகளில் அகதிகள் பயணித்து வருகின்றனர்.
நடுக்கடலில் படகு கவிழந்து ஆண்டு தோறும் ஏராளமான அகதிகள் உயிரிழந்த வருகின்றனர். ஒரு சில படகுகளிருந்துவரும் அபாய சிக்னல்களை வைத்து இத்தாலி கடற்படையினர் அவர்களை காப்பாற்றியும் வருகின்றனர். இந்த வகையில் நேற்று ஒரே நாளில் 3 படகுகளில் வந்த 1500 அகதிகளை இத்தாலி கடற்படையினர் மீட்டு சாதனை படைத்துள்ளனர். மீட்கப்பட்ட அகதிகள் சிசிலியன் துறைமுக நகரங்களான அகஸ்டா மற்றும் போர்ட்டோவில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 76 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் மத்திய தரைக்கடல் பகுதியாக நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.