.

Pages

Saturday, April 11, 2015

திடீரென கரை ஒதுங்கிய 156 திமிங்கலங்கள்: சுனாமி அச்சத்தில் ஜப்பானியர்கள் !

ஜப்பானிய கடற்கரையில் 156 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால், 2011-ல் நிகழ்ந்ததை போல் மீண்டும் சுனாமி பேரழிவு நிகழும் என அந்நாட்டு மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

அந்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு, கடலுக்குள் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை எழுந்தது. இதில் 19,000 பேர் பலியானார்கள். இவ்வாறு பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்னர், 50 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அதே போல் தற்போதும் 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால், 2011-ல் ஏற்பட்ட ஆபத்து தங்களை சூழ்ந்துவிடுமோ? என மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

2011ல் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு ஆபத்தும் ஏற்பட்டது.

அந்நாட்டு கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய திமிங்கலங்களை பார்வையிட்ட விஞ்ஞானிகள் கூறுகையில், ‘கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அனைத்தும் புற்றுநோய் உள்ளிட்ட எவ்வித நோயாலும் பாதிக்கப்படவில்லை. எனவே திமிங்கலங்கள் உயிரிழக்க காரணம் என்ன என்பதை பற்றி ஆராய்ந்து வருகிறோம்’ என்றனர். எனினும் திமிங்கலம் கரை ஒதுங்கியதால் சுனாமி ஏற்படும் என யாரும் அச்சப்பட தேவையில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், சமூக ஊடகங்களிலோ அடுத்த பூகம்பம் வரப்போகிறது, தயாராக இருங்கள் என்றும், வரும் 12ஆம் தேதி நாம் மிகப்பெரிய ஒன்றை சந்திக்கவிருக்கிறோம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து நாட்டில்கூட கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 100 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. அதற்கு அடுத்த 2 நாட்களில் அந்நாட்டின் 2வது மிகப்பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.