தஞ்சாவூர் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் செயல்முறைகளின் படி பேராவூரணி, சேதுபாவாசத்திரம் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையங்களின் சார்பில் ஒன்றியத்தில் உள்ள பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை குடியிருப்பு வாரியாக கணக்கெடுக்கும் பணி ஏப்ரல், மே-2015 ஆகிய மாதங்களில் நடக்கிறது.
இதில் இடம்பெயர்ந்த குடும்பத்தை சேர்ந்த 6 முதல் 14 வரையுள்ள அனைத்து பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்றவர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியப்பட்டு, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இப்பணியில் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, கல்விக்குழுவினர், கல்வி தன்னார்வல அலுவலர்கள் அனைத்து குடியிருப்புகளிலும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.




பொதுவாக பெற்றோர்கள் தொழில் நிமித்தமாக இடம்பெயர்தல், குழந்தைகளுக்கு கல்வி கற்கும் ஆர்வம் குறைதல், போன்றவற்றால் பள்ளியில் இடைநிற்றல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உண்டு உறைவிட பள்ளிகள் மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப் படும் மதிய உணவில் ருசி அதிகரிக்க அதிக காய்கறிகள் சேருங்க, ஒரே ருசி கொண்ட சாப்பாட்டை சாப்பிட்டு மாணவர்களுக்கு போரடிக்குது, சத்துடன் ருசி கொண்ட சாப்பாடை வழங்க தஞ்சாவூர் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கிட்ட சொல்லுங்க.
ReplyDelete