.

Pages

Friday, April 10, 2015

நெருப்பை கக்கும் மர்ம குழி: பீதியில் உறைந்த சீனர்கள் !

சீனாவின் தென் பகுதியில் உள்ள மர்மமான குழியிலிருந்து தீ ஜுவாலைகள் வெளிவருவதை கண்டு அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
சீனாவின் ஸின்ஜியாங் உய்கூர்  பகுதியில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 3 அடி அகலத்தில் மர்மமான முறையில் ஆழமான குழி ஒன்று உள்ளது.

இதில் தொடர்ந்து நெருப்பை கக்கி வரும் தீ ஜுவாலைகளால், அப்பகுதி முழுவதும் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பமுடன் காணப்படுகிறது.

தீக்குழியிலிருந்து வெளிவரும் வெப்பம் சுமார் 792 டிகிரி செல்சியஸாக உள்ளதால், அதற்கு அருகில் வைக்கப்படும் பொருளை எளிதில் தீப்பிடிக்க வைக்கிறது. அதேபோல், வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், குழியின் ஆழத்தை கணக்கிட பூகோள விஞ்ஞானிகளால் அருகில் செல்ல முடியவில்லை.

இந்த குழியை தினந்தோறும் அச்சத்துடன் கண்டு வரும் உள்ளூர்வாசிகள், இது ஏதோ நரகத்திற்கு செல்லும் வழியாக இருக்குமா என சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த பகுதியில் எரிமலைகள் இருந்ததற்கான சாத்திய கூறுகள் இல்லாததால், இந்த குழியை பற்றிய மர்மம் நீடித்தவாறே உள்ளது.

இதுகுறித்து தீயணைப்பு துறையை சேர்ந்த சென் லாங் என்ற அதிகாரி கூறுகையில், சுமார் 1970ம் ஆண்டுகளில் இந்த பகுதி நிலக்கரியை வெட்டி எடுக்கும் சுரங்கமாக பயன்படுத்தப்பட்டது.

ஆனால் நிலக்கரி தோண்டி எடுக்கும் பணி முடிவு பெற்றதும், அதிகாரிகள் இந்த பகுதியை முழுமையாக மூடாமல் விட்டுவிட்டதால், தற்போது பூமிக்கு அடியில் நிலக்கரி எரிந்து வருவதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நெருப்புக்குழியை குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், மர்மமான குழியை நேரடியாக காண நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.