மாலை 3.30 மணியளவில் குழந்தைகளுக்கான போட்டிகள் ஆரம்பமாயின. 5-7 வயது குழந்தைகளுக்கான கிராஅத் போட்டி, 8-9 வயது குழந்தைகளுக்கான கிராஅத் போட்டி, வினாடி வினா போட்டி ஆகியவை சிறப்பாக நடந்தன. கிராஅத் போட்டிகளை பொறியாளர் அப்துல் கஃபூர் அவர்கள் நடுவராக இருந்து நடத்தித் தந்தார். வினாடி வினா போட்டியை பொறியாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் நடத்தித் தந்தார்.
மாலை 6 மணியளவில் முக்கிய நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. “குடும்பத்தை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?” என்ற தலைப்பில் டாக்டர் முஹம்மத் இஸ்மாயீல் B.P.T., M.Sc. (Senior Specialist Therapist, Rashid Hospital, Dubai) அவர்கள் சிறப்பாக பவர்பாய்ண்ட் காட்சி மூலம் விவரமாக எடுத்துரைத்தார். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் சிறிய சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாகப் பேணுவது எப்படி என்பதை அவர் சுவைபட எடுத்துரைத்தது பார்வையாளர்கள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
மஃக்ரிப் இடைவேளைக்குப் பிறகு உடற்பயிற்சி டெமோ நடைபெற்றது. முக்கியமான எளிய யோகாசனங்களை சகோ. செய்யது அப்துல்லாஹ் அவர்கள் விளக்கிக் கூற, நான்கு சகோதரர்கள் அதனை அழகுற மேடையிலேயே செய்து காண்பித்தனர். இது பார்வையாளர்களைப் பரவசத்தில் அப்படியே கட்டிப் போட்டது.
இது முடிந்தவுடன் “குடும்பப் பிணைப்பு” என்ற தலைப்பில் பொறியாளர் தமீம் மன்சூர் B.E., MBA அவர்கள் உரையாற்றினார். இஸ்லாம் குடும்ப உறவுகளைப் பேணுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அவர் தனது உரையில் எடுத்துக் கூறினார்.
அதன் பின்னர் “நலமான குடும்பம் வளமான எதிர்காலம்” என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மத் ஸாதிக் PMP, CIMA (London) (Project Manager, GTFS, Dubai) அவர்கள் மிக சுவாரஸ்யமாக உரையாற்றினார். “இன்று நமது வாழ்க்கை ஓட்டம், ஒட்டம் என்று ஒடிக்கொண்டே இருக்கிறது, மரணம் வரை இந்த ஓட்டம் தொடர்கிறது” என்று தொடங்கிய அவர், பவர்பாயிண்ட் காட்சிகள் மூலம் பல உதாரணங்களைக் கூறி இந்த ஓட்டத்திலும் குடும்பத்தை மன உளைச்சலின்றி, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி என்று சிறப்புரையாற்றினார்.
ஆரோக்கியமான வாழ்வு குறித்த விழிப்புணர்வைப் பெறுவதற்காக அமீரகத்தில் நல்ல பல சமூகப் பணிகளைச் செய்து வரும் Emirates India Fraternity Forum (EIFF) வெகு சிறப்பாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் அமீரகவாழ் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் திரளாகப் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்துத் தந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பயனுள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்த நிகழ்ச்சியையும் பொறியாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.



அடிக்கிற வெயிலுக்கும், வீசுகின்ற புழுதி காற்றுக்கும் மக்கள் வெளியில் போகமுடியாமல் ஏதாவது மாலுக்கு போய் விடுமுறை நாட்களை கழிக்கின்றார்கள். இந் நிகழ்ச்சிப் பற்றி முன்னேமே அறிவிப்பு இத்தளத்தில் வந்திருந்தாள் குடும்பத்தோடு அங்கே கலந்திருப்பார்கள். இந்த வேண்டுகோளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆலோசிக்க வேண்டுகின்றேன்.
ReplyDelete