.

Pages

Thursday, April 2, 2015

அதிரை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு !

தமிழக அரசின் அறிவிப்பு: வாக்காளர் பட்டியல் நூறு சதவித சரியான வாக்காளர்களை உருவாக்குவதற்கு வாக்காளர் பட்டியலில் பெயருள்ள வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் ஆகிய இரண்டையும் ஒரே தாளில் ஜெராக்ஸ் எடுத்து உங்கள் வீடு தேடி வரும் அரசு அலுவலரிடம் கொடுத்து சரியான பதிவை செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆதார் அட்டை கிடைக்கபெறாதவர்கள் குடும்ப அட்டை நகலையும், வாக்காளர் அடையாள அட்டை நகலையும் இணைத்து ஜெராக்ஸ் எடுத்து அரசு அலுவலரிடம் வழங்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் நகலில் தங்களுடைய அலைப்பேசி, தொலைப்பேசி எண்களை குறிப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1 comment:

  1. அதிரை நியூசுக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.