.

Pages

Monday, April 6, 2015

அதிரையில் நடைபெற்ற மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் பங்கேற்பு !

அதிரை பேரூர் திமுக சார்பில் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஏனாதி பா. ராமநாதன் தலைமை வகித்தார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் திரு. எஸ் எஸ் பழனி மாணிக்கம், எஸ் எஸ் ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்பிரமணியம், அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம். குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக அதிரை பேரூர் திமுக அவைத்தலைவர் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் மாநில இலக்கிய அணிச்செயலாளர் கவிதைபித்தன், இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.கூட்ட முடிவில் அதிரை பேரூர் திமுக துணை செயலாளர் அன்சர்கான் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஒரு மாதமாக தமிழகமெங்கும் கொண்டாடி வருகிறார்கள் அவரது பிறந்த நாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், உடைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு, ஹார்லிக்ஸ் பாட்டில்கள், பழங்கள் ஆகியவற்றை வழங்க வில்லையா?, இலவசத்துக்கு குட்பை சொல்லிட்டீங்களா ? குட்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.