இதுதொடர்பாக கடந்த [ 23-02-2015 ] அன்று அதிரை நியூஸில் 'பள்ளி அருகே வேகத்தடை: அதிரை ஆர்வலரின் ஆதங்கம் !' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. அதில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடந்துள்ளன என்றும், இந்த நான்கு வழி இணைப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்தி, 'விபத்து பகுதி' என எச்சரிக்கை பலகையையும் வைத்தால் ஓரளவு விபத்தை குறைக்கலாம் என்று தெரிவித்திருந்தோம். இவற்றை வாசித்த நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் இந்த பகுதியில் வாகன வேகத்தடுப்பு அமைப்பது அதிகளவில் நடைபெறும் விபத்துகளை தவிர்க்க உதவும் என கூறி மாவட்ட ஆட்சியர், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை கடந்த [ 26-02-2015 ] அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் உத்தரவின் பேரில், அதிரை காவல்துறை ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் ஏற்பாட்டில் சம்பந்தப்பட்ட பகுதியில் கடந்த அன்று [ 06-04-2015 ] காலை முதல் புதிதாக வாகன வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறையினருக்கு சரியான நேரத்தில் கோரிக்கையை எடுத்துச்சென்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களுக்கும், கோரிக்கை ஏற்று விரைவில் நிறைவேற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கும் அதிரை நியூஸ் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிரை நியூஸ் குழு

மாணவர்களின் நலன் கருதி வேகத்தடை அமைக்க எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். நெடுஞ்சாலை துறை செய்ய வேண்டிய வேலை நமது தொகுதி வேட்பாளர் செய்துள்ளார் -நன்றி. இந்த வேகத்தடை வேகத்தை அவ்வளவாக குறைக்காது மேலும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து பைபர் வேகத்தடை நான்கு பக்கமும் அமைக்க வேண்டும். இதன் மூலம் எல்லா விபத்துக்களும் தடுக்கப் படும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பதிவுக்கு நன்றி.

ReplyDelete