.

Pages

Thursday, April 9, 2015

ஊருக்குள் பேருந்து வருவதில்லை: பொதுமக்கள் பஸ் மறியல் !

பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் குருவிக்கரம்பை கிராமத்திற்க்குள் சென்று வருவது வழக்கம்.
         
கடந்த சில மாதங்களாக ஓரிரு பேருந்துகள் தவிர மற்ற அரசு, தனியார் பேருந்துகள் குருவிக்கரம்பைக்குள் வராமல் சேதுபாவாசத்திரம் சென்று விடுவதாக கிராம பொதுமக்கள் முறையிட்டனர். இதற்கு தீர்வு காணாவிட்டால் சாலை மறியல் செய்யப்போவதாக அரசு நிர்வாகத்திடம் கிராமத்தினர் தெரிவித்தனர்.
         
இதையடுத்து பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில், பேருந்து ஊருக்குள் வந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கூட ஒரு சில பேருந்துகள் ஊருக்குள் செல்லவில்லை என்றும், இதனால் " பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள், அவசர தேவைக்கு, மருத்துவமனை செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர் " என கிராம மக்கள் புதன்கிழமை அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
           
தகவல் அறிந்து பேராவூரணி வட்டாட்சியர் ராஜசேகரன், காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் விரைந்து வந்து, " பேருந்து உரிமையாளர்களின் பேசி பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் " என கிராம மக்களிடம் பேசி சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம், ஊராட்சி தலைவர் கண்ணகி வைரவன் தலைமையில் கிராமத்தினர்  சாலைமறியலில் பங்கேற்றனர்.

செய்தி: எஸ். ஜகுபர்அலி, 
பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.