அதிரை நியூஸ்:துபாய், ஆகஸ்ட் 09
ஆர்வக் கோளறுகள் பல பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது நிதர்சனம் அதுவும் இன்றைய சமூக வலைத்தளங்கள் திறந்துவிடப்பட்ட பின் 'பகிர்கிறேன்' பேர்வழி என எதையும் யோசிக்காமல் அனைத்தையும் பகிர்ந்து வருகிறோம் ஆனால் இங்கே தான் நிற்கின்றது அமீரக சட்டம் என்பதையும் மறந்து விடுகின்றோம்.
அமீரகத்தில் நடைபெறும் விபத்துக்களை படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தால் தண்டனை நிச்சயம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது அமீரகம்,
இது சமீபத்தில் நடந்த விமான விபத்தை ஒட்டிய 'பகிர்தல்கள்' எல்லை கடந்து சென்றதால், அமீரக சட்டம் தன் கடமையை செய்யும் என நினைவூட்டியுள்ளனர். விழித்துக் கொள்வோர் பிழைத்துக் கொள்வர்.
Source: The New Arab / Msn
தமிழில்: நம்ம ஊரான்
நல்ல சட்டம்
ReplyDelete