உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகுகள் 125, 126, 127, 128 சார்பில், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது.
பேரணியை, கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகையதீன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாட்டுநலப்பணி திட்ட பொறுப்பாளர்கள் முனைவர் முத்துகுமாரவேல், முனைவர் எம் பழனிவேல், பேராசிரியர் என்.சேகர், முனைவர் சாபிரா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி, கல்லூரி வளாகத்திலிருந்து புறப்பட்டு, ஈசிஆர் சாலை வழியாக அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது. இதில் தாய்ப்பாலின் மகத்துவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணிதிட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.






உலகிலேயே விலை மதிப்பில்லாத ஓர் உணவுப் பொருள் இருக்கிறது என்றால் அது தாய்ப்பால்தான்.
ReplyDelete