உள்ளாட்சித் தேர்தலில் இந்த தடவை முதன் முதலாக பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெண்கள் போட்டியிடுவதற்கான வார்டுகளை பிரிக்கும் பணியில் யார் ? யார் ? போட்டியிட உள்ளார்கள் என அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று அதிக இடங்களை கைப்பற்றுவதற்கு பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகின்றன. இதில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற / தோல்வியுற்ற பழைய முகங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக சார்பில் கடந்தமுறை போட்டியிட்ட பழைய முகங்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் நடந்து முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற ஒட்டுக்கு பணமே கொடுக்காத வேட்பாளர்கள் வெற்றி பெற்ற வரலாறு நிகழ்ந்துள்ளது. அதனால், மக்கள் செல்வாக்கு பெற்ற, கட்சிக்கு விசுவாசமுள்ள, தகுதியான நபர்களை தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கான 75 சதவீத பணத்தை திமுக மேலிடமே வழங்க முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் நாளிதழ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருந்தது. தேர்தல் செலவை கண்காணிக்கவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், திமுக மேலிடத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் திமுகவில் சீட் கேட்பது அதிகரிக்கக்கூடும்.

சீட்டு யாருக்கு என்பது பணத்தை வைத்து தான் முடிவுக்கு வருவார்கள்., மக்களும் பணத்தை எதிர்பார்ப்பார்கள் அதனால தேர்தல் அன்று மந்திரிச்சு விட்ட ஆடு , கோழி மாதிரி நேரா போயி பழைய கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்து விடுவார்கள். 2500 சம்பளம் வாங்கும் கவுன்சிலர்களில் 1..2.. பேரு தான் தன் கடமையை செய்துருக்கிறார்கள். சீரமைக்கப்பட்ட குளமோ அல்லது டாய்லெட் எதுவுமே மக்கள் பயன்பாட்டில் இல்லை
ReplyDelete