அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 07
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கெளசல்யா, சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்து, தாய்ப்பால் சிறப்பு குறித்து எடுத்துரைத்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹாஜா முகைதீன் தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து பேசினார்.
விழாவில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த இரண்டு தாய்மார்களுக்கு தமிழக முதலமைச்சரின் 'அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம்' பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக செவிலியர் ஆர். ராஜலெட்சுமி வரவேற்றார். முடிவில் லேப் டெக்னிசியன் ஜெயந்தி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அதிரை மைதீன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.