சவூதி அரேபியா, ஆகஸ்ட் 08
சவூதியில் நடைபெற்ற ஒரு திருமணம், போட்டோ எடுக்கும் பிரச்சனையால் உடனடி விவாகரத்தில் முடிந்தது.
சவூதியில் வெளிவரும் SADA என்ற அரபி பத்திரிக்கை தெரிவித்திருப்பதாவது, புதுமணப்பெண் ஒருவர் தனது திருமண நிகழ்வுகளை நினைவுகளாக பாதுகாக்க ஒரு புகைப்பட நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்தியுள்ளார் ஆனால் இந்த போட்டோக்களை இந்த நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தலாம் என எச்சரித்த கணவரின் சொல்லை காதில் போட்டுக் கொள்ளவில்லை புதுமணப்பெண்.
விளைவு, தடாலடி புதுமாப்பிள்ளை திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் முன்னிலையிலேயே விவாகரத்து செய்வதாக அறிவித்து அவையோரை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
மேற்கொண்டு எத்தகைய விபரங்களையும் அப்பத்திரிக்கை தெரிவிக்கவில்லை. ( முதல் கோணலே முற்றும் கோணலாய் போனது என்பது இது தானோ ? )
Source: Emirates247
தமிழில்: நம்ம ஊரான்

இது எதிர் காலத்தில் ஒரு முன்மாதிரியாய் அமைந்து விடுமோ என அச்சப்பட வேண்டியதிருக்கிறது
ReplyDelete