தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட சில வார்டுகளின் சாலைப் பணிகள், வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்காத அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர்கள் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலக உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி உள்ளாட்சி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிகாலம் எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையொட்டி அதிரை பேரூராட்சி இருப்பில் உள்ள பொதுநிதியில் இருந்து 21 வார்டுகளுக்கும் தலா ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் வடிகால் வசதிகள் ஏற்படுத்த அதிரை பேரூர் நிர்வாகம் சார்பில் திட்ட வரைவு தீட்டப்பட்டு மேலதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை - பேருந்து நிலையம் வடிகால் அமைத்தல், பேருந்து நிலையம் மேம்படுத்துதல் உட்பட 12 வார்டுகளுக்கு மொத்தம் ரூ 57.25 லட்சம் மதிப்பீட்டில் பணிகளை தொடங்க பேரூராட்சி உதவி இயக்குனரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதுமுள்ள வார்டுகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
இந்தநிலையில் கடந்த அன்று [ 05-08-2016 ] அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் குறிபிட்ட சில வார்டுகள் புறக்கணிப்பு குறித்து கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விக்கு திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை மீதுமுள்ள வார்டுகளின் திட்டப் பணிகளுக்கு உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்படும் என கூறப்பட்டதாக தெரிகிறது.
அதிராம்பட்டினம் பேரூராட்சியின் பொது நிதி சுமார் ரூ 1.10 கோடி இருப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் அரசுக்கு செலுத்த வேண்டிய கடன், பங்கு தொகை, பணியாளர்கள் ஊதியம் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கான தொகையினை 6 மாத கால அளவிற்கு பேரூராட்சி நிர்வாகம் வைப்பு தொகையாக இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால் மீதமுள்ள வார்டுகளின் திட்டப் பணிகள் தொடங்குவதில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பேரூர் நிர்வாகம் சார்பில் மீதமுள்ள பணிகளுக்கு உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெறுவதில் தாமதமாகி வருவதால் அதிருப்தி அடைந்த அதிராம்பட்டினம் பேரூராட்சி கவுன்சிலர்கள் எதிர்வரும் [ 16-08-2016 ] அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் பேரூராட்சி அலுவலக உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் புறக்கணிக்கப்பட்ட வார்டுகளின் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருப்பதாக சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது போன்ற கோரிக்கைகலுக்கு பொதுமக்கள் அவசியம் கலந்துக்கொல்லவும்
ReplyDelete5 ஆண்டு முடிவடையும் நேரத்தில் உள்ளிருப்பு போராட்டம்.. இவர்களுக்கு ஓட்டுப்போட்டு மக்களை திசை திருப்பவா? கோரிக்கை வைத்த 2 ஆண்டில் ஏதாவது செய்தால் மக்கள் நம்புவார்கள்.. ரோட்டை விடுங்கள் ..தொகுதி துப்புரவாக இருக்கா? ஏதாவது மரம் நட்டினோமா? மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோமா? ஆதரவு கொடுப்பவதை விட திறமையானவர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
ReplyDeleteஎன்னுடைய வார்டை பொருத்தவரை போதுமான பணியினை செய்து முடித்துள்ளேன் 90 சதவீதம் பணிகள் முடிவுற்றது .
ReplyDelete