பட்டுக்கோட்டை, ஆக. : 05
பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் அம்மா மக்கள் சேவை மைய முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 45 மனுக்கள் மீது உரிய காலத்துக்குள் தீர்வு காண வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நகராட்சி ஆணையர் கே. அச்சையா உத்தரவிட்டார்.
மேலும் இம்முகாமில் மனு அளித்த 25 பேருக்கு பிறப்பு, இறப்பு சான்றுகளும், 4 பேருக்கு கட்டட உரிமங்களும் உடனடியாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு நகர் மன்றத் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கே. அச்சையா முன்னிலை வகித்தார்.
நகராட்சிப் பொறியாளர் கே. ரெங்கராசு, நகரமைப்பு அலுவலர் ராமலிங்கம், துப்புரவு அலுவலர் மூர்த்தி, நகராட்சி மேலாளர் ஹேமலதா, நகர் மன்ற உறுப்பினர்கள் செல்ல. நாகராஜன், பி.எஸ். பிரபு, ஆர். ரவிச்சந்திரன், எஸ். மாஸ்கோ மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதன்கிழமை தோறும் நடத்தப்படும் இம்முகாமில், பொதுமக்கள் கோரும் பிறப்பு, இறப்புச் சான்று, சொத்து வரி, தொழில் வரி விதித்தல், பெயர் மாற்ற உத்தரவு, குடிநீர் இணைப்பு, கட்டட உரிமம், வர்த்தக உரிமம், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்குச் சான்று போன்றவற்றை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அடுத்தடுத்து நடைபெறவுள்ள அம்மா மக்கள் சேவை மைய முகாமில் பொது மக்கள் தவறாமல் பங்கேற்று பயன் பெறலாம் என நகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.