தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதியை அனைத்து வார்டுகளுக்கு பகிர்ந்தளிக்க வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி உள்ளாட்சி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிகாலம் எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையொட்டி அதிரை பேரூராட்சி இருப்பில் உள்ள பொதுநிதியில் இருந்து 21 வார்டுகளுக்கும் தலா ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் வடிகால் வசதிகள் ஏற்படுத்த அதிரை பேரூர் நிர்வாகம் சார்பில் திட்ட வரைவு தீட்டப்பட்டு மேலதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை - பேருந்து நிலையம் வடிகால் அமைத்தல், பேருந்து நிலையம் மேம்படுத்துதல் உட்பட 12 வார்டுகளுக்கு மொத்தம் ரூ 57.25 லட்சம் மதிப்பீட்டில் பணிகளை தொடங்க பேரூராட்சி உதவி இயக்குனரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முஹம்மது சரீப் ( 14 வது வார்டு ), முஹம்மது யூசுப் ( 16 வது வார்டு உறுப்பினரின் கணவர் ), ஹாஜா முகைதீன் ( 8 வது வார்டு ), முஹம்மது இப்ராஹீம் ( 21 வது வார்டு ), செய்யது முஹம்மது ( 12 வது வார்டு ) ஆகியோர் தங்களது வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதியை அனைத்து வார்டுகளுக்கு பகிர்ந்து அளிக்கவும், வார்டுகள் புறக்கணிப்பை கண்டித்து கவுன்சிலர்கள் கோஷங்கள் இட்டனர். பிற்பகல் 12 மணி முதல் நடந்த உள்ளிருப்பு போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு கூடியது.
இதுதொடர்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி ( பொறுப்பு ) அலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, 'அதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டுகள் திட்ட பணிகளின் வரைவு ஒப்புதலுக்காக மேலதிகாரிக்கு அனுப்பட்டுள்ளது' என்றார்.
இதுதொடர்பாக பேரூராட்சி உதவி இயக்குனரை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிராம்பட்டினம் பேரூராட்சியிடம் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டப் பணிகள் தொடர்பாக கோரிக்கை வந்துள்ளது. பரிசிலனை செய்யப்படும்' என்றார்.







இதுவரைக்கும் நிதி ஒதுக்கப்பட்டா இல்லை
ReplyDeleteஅடுத்து உண்ணாவிரதம் நடத்த விரைவில் ஆலோசனை
ReplyDeleteவி ரைவில் உண்ணாவிரடம் நடத்தப்படும்
ReplyDelete