மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் கிளை சார்பில் இன்று இரவு நடைபெற்ற நிர்வாகிகள் - உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் செயலாளர் ஹாலித் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளராக எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் சாதக - பாதகங்களை அலசி ஆராய்ந்து அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் மனிதநேய மக்கள் கட்சி புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் மமக கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.









நல்ல முடிவு.. இப்படியே ஒவ்வொரு அமைப்பும் தங்கள் நபரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்தினால் ஊருக்கு " ஏழரை " ஆரம்பித்து விடும். பேரூராட்சி நிறுவாகத்தால் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியடையவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது அதே நேரத்தில் பன்முனை போட்டி ஊருக்கு நல்லது அல்ல. அரசியல் - அமைப்பு சாரதா., மக்கள் உணர்வுகளை புரிந்து செயலாற்றும் நபரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete1000 vote. Ok
ReplyDeleteMMK. 1000. dmk 1500. Admk. 1300. Muslim look 1000. Thameem An sari team. 350. Sdpi. 1000. All muslim vote. Bjp. 2000. Conform. Chairman
ReplyDeleteCongress. 1000
Deleteஊர் நலன் கருதி நல்லவருக்கு உறுதுணையாக இருங்கள்
ReplyDeleteஊர் நலன் கருதி நல்லவருக்கு உறுதுணையாக இருங்கள்
ReplyDelete